IFHRMS - payslip download online & Password reset
GOVERNMENT EMPLOYEE PAYSLIP DOWNLOAD IN IFHRMS
IFHRMS ல் PAYSLIP எவ்வாறு பதிவிறக்கம் செய்வது , IFHRM ல் PASSWORD ஐ எவ்வாறு RESET செய்வது என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்
PAYSLIP பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் வலைத்தளத்தில் IFHRMS என்று search செய்யும்பொழுது உங்களுக்கு முதலாவதாக கருவூலத்தின் வலைதள லிங்க் கிடைக்கும் அதை தேர்வு செய்யவும் அல்லது இங்கே கிளிக் செய்து கருவூலத்தின் வலைதளத்திற்கு செல்லலாம்
IFHRMS வலைத்தளத்தை திறந்ததும் முதல் பக்கம் மேலே காட்டியுள்ள படத்தைப் போல இருக்கும் அதில் உங்களுடைய USER ID அதாவது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் IFHRMS EMPLOYEE CODE ( 11 இலக்க எண் - உங்கள் payslip, IFHRMS ல் இருந்து வந்த Message, IFHRMS ல் இருந்து வந்த e-Mail போன்றவற்றில் கண்டிப்பாக இருக்கிறது) மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து sign in கொடுத்தால் நீங்கள் வலைதளத்திற்கு உள்ளாக செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். ஒருவேளை உங்களுக்கு பாஸ்வேர்ட் தெரியவில்லை என்றால் கீழே காட்டப்பட்டுள்ள வழியை பின்பற்றி உங்களுடைய பாஸ்வேர்டை நீங்கள் RESET செய்து கொள்ளலாம்
Password ஐ ரீசெட் செய்வதற்கு பர்கெட் பாஸ்வேர்ட் ( FORGET PASSWORD) என்பதை தேர்வு செய்யவும்
இப்பொழுது உங்களுக்கு கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்ற பக்கம் கிடைக்கும் இதில் உங்களுடைய 11 இலக்க எண்ணை பதிவு செய்து அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சா (CAPTCHA) எண்ணையும் பதிவு செய்து வெரிஃபை பட்டனை அழுத்தவும்

இப்பொழுது உங்களுக்கு கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்ற பக்கம் கிடைக்கும். நீங்கள் இப்பொழுது தான் முதல் முதலாவதாக பாஸ்வேர்டை உருவாக்குகிறீர்கள் என்றால் ஓ டி பி முறையை தேர்வு செய்யவும் அல்லது ஏற்கனவே நீங்கள் ரீசெட் செய்து இருந்தால் அதற்கு நீங்கள் கொடுத்த செக்யூரிட்டி ஆப்ஷனை (security question) தேர்வு செய்யலாம்.
OTP முறையை தேர்வு செய்த உடனே உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி ஐ கீழ்க்கண்ட பக்கத்தில் உள்ளீடு செய்து வெரிஃபை கொடுக்கவும்.
ஓ டி பி வெரிஃபை ஆன பின்பு பாஸ்வேர்டை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பதிவு செய்ய இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும், அந்த இரண்டிலுமே ஒரே பாஸ்வேர்டை பதிவு செய்யுங்கள். பாஸ்வேர்டு எண்களாலும் எழுத்துக்களாலும் சிறப்பு குறியீடுகளையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் (Letters, Numbers & special character- EX: Tamil@1965)அவ்வாறு உருவாக்கிய பின்னர் SUBMIT கொடுத்தால் பதிவு செய்த Password உடனே பதிவாகிவிடும்.
பின்பு நீங்கள் மீண்டும் முதல் பக்கத்திற்கு சென்று உங்களுடைய 11 இலக்க எண்ணையும் தற்போது உருவாக்கிய பாஸ்வேர்டையும் உள்ளீடு செய்து sign in கொடுக்கவும்
இப்பொழுது உங்களுக்கு கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல பக்கம் கிடைக்கும். அதில் நீங்கள், உங்களுடைய ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படியான, அதில் உள்ள ஒரு கேள்வியை தேர்வு செய்து அதற்கான பதிலையும் கொடுத்து SAVE செய்து கொள்ளவும். பிற்காலத்தில் உங்களுடைய Login பாஸ்வேர்டை மறந்து விட்டாலோ! அல்லது மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ!! இந்த security question & answer ஐக் கொண்டு உங்களுடைய லாகின் பாஸ்வேர்டை RESET செய்து கொள்ளலாம்
இப்போது மேல் உள்ள மெனுவில் ALL REPORTS என்பதை தேர்வு செய்து, அடுத்த பக்கத்தில் PAYSLIP என்பதை தேர்வு செய்யவும் .
படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று, உங்களுக்கு எந்த மாத Payslip தேவையோ, அந்த மாதத்தை தேர்வு செய்து GO என்ற பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த மாதத்திற்கான Payslip ஒரு லிங்க் வடிவில் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல ( EMP REGULAR SALARY) காண்பிக்கப்படும் அந்த லிங்கில் நீங்கள் மீண்டும் ஒருமுறை அழுத்தும் பொழுது உங்களுடைய PAYSLIP உங்களுடைய கணிப்பொறியில் SAVE ஆகிவிடும்.
SAVE ஆகும் PAYSLIP ஆனது ZIP file ஆக இருக்கும். அதை நீங்கள் Compress செய்து Payslip ஐ பெற்றுக் கொள்ளலாம்
இவ்வாறு நீங்கள் பதிவிறக்கம் செய்த payslip ஒரு பாஸ்வேர்டை கொண்டு பாதுகாக்கப்பட்டு இருக்கும். அந்த பாஸ்வேர்ட் உங்களுடைய பிறந்த தேதியாகும். பிறந்த தேதியை DDMMYYYT என்ற முறைப்படி உள்ளீடு செய்து Payslip ஐ பார்த்துக் கொள்ளலாம். (Ex: பிறந்த தேதி 06/May/1965 என்றால் 06051965 என்று உள்ளீடு செய்ய வேண்டும்).
இதே போன்று கருவூலம் மொபைல் அப்ளிகேஷனை கூகிள் PLAYSTORE இல் டவுன்லோட் செய்து அதன் மூலமும் எடுத்து கொள்ளலாம்.