E MANDATE REGISTRATION - HDFC
E MANDATE REGISTRATION செய்வது எப்படி என்று இங்கே விளக்கமாக பார்ப்போம் ( SIGNATURE DIFFER PROBLEM SOLVING EASY METHOD)
வங்கியில் பணம் இருந்தும் இ எம் ஐ எடுக்காத சமயத்தில் செய்ய வேண்டிய முக்கியமான வழிமுறை
உங்களுடைய சம்பள கணக்கு இல்லாத வேறு வங்கியில் நீங்கள் லோன் எடுக்கும் பொழுது மாத தவணை செலுத்துவதற்கு ECS அல்லது ACH முறை பயன்படுத்தப்படும். ECS/ACH க்காக நீங்கள் போடும் கையெழுத்து உங்களுடைய வங்கி கணக்கிற்காக போடப்பட்டுள்ள கையெழுத்துடன் ஒத்துப்போகாமல் இருக்கும் பட்சத்தில் இந்த ECS/ACH முறை நிராகரிக்கப்படும். ஆனால் E Mandate முறையில் கையெழுத்திற்கு வேலை இல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் முறையில் நடப்பதால் மேற்கண்ட பிரச்சினை ஏற்படாது. எனவே பெரும்பான்மையான வங்கிகள் இந்த E Mandate முறையை பரிந்துரைக்கின்றன.
E MANDATE முறை என்பது காசோலை எதுவும் வழங்காமல் எலக்ட்ரானிக் முறையில் அதாவது உங்களுடைய நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் கார்டு மூலம் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து நீங்கள் கட்ட வேண்டிய மாதத் தவணையை மாதா மாதம் தானியங்கி முறையில் எடுப்பதற்கு நீங்கள் அனுமதி வழங்கும் வழிமுறையாகும்.
இங்கே ஹெச்டிஎஃப்சி வங்கியில் e-MANDATE செய்வதற்கான வழிமுறையை பார்ப்போம்.
உங்களுடைய HDFC வங்கி லோன் அப்ரூவல் ஆன உடனே e MANDATE செய்வதற்கான லிங்கை வங்கியில் இருந்து உங்களுடைய மொபைல் எண்ணிற்கு சாதாரண எஸ்எம்எஸ்- ல் அனுப்புவார்கள். அல்லது இங்கே கிளிக் செய்து e-MANDATE வலைதளத்திற்கு செல்லலாம்
வலைதளத்தை திறந்தவுடன் லோனிற்காக எந்த மொபைல் நம்பர் வங்கியில் கொடுத்தீர்களோ? அந்த மொபைல் நம்பரை உள்ளீடு செய்து SEND OTP கொடுக்கவும். இப்பொழுது உங்கள் நம்பருக்கு வரும் OTP ஐ உள்ளீடு செய்து VERIFY OTP கொடுக்கவும்.
நீங்கள் விருப்பமான முறையை தேர்வு செய்து SUBMIT/PROCEED கொடுக்கும் பொழுது உங்களுடைய வங்கியின் வலைதள பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். (இங்கு SBI வங்கியின் தகவல்களை பயன்படுத்தி E MANDATE செய்யும் முறையை காண்பிக்கப்பட்டுள்ளது).
உங்கள் வங்கியின் வலைதளத்திற்கு வந்த பின்பு உங்களுக்கு வரும் ஓடிபி மற்றும் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து மாத இஎம்ஐ கட்டுவதற்கான ஒப்புதலை நீங்கள் அளிக்க வேண்டும். நீங்கள் ஒப்புதல் அளித்த பின்பு கீழே காணும் படத்தில் உள்ளது போன்று Mandate Authorization Successful ன்று வரும்.
இந்த நிலையில் சில நொடிகள் காத்திருக்கவும். பின்பு மீண்டும் hdfc வங்கியின் வலைதளத்திற்கு ஆட்டோமேட்டிக்காக Redirect ஆகும். அங்கே கீழே காணும் படத்தில் உள்ளது போல Mandate Registered Successfully for என வந்து உங்களுடைய பெயர், இஎம்ஐ தொகை, உங்களுடைய போன் நம்பர், UMRN போன்றவை தெரியும் இந்த பக்கத்தை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ரிஜிஸ்ட்ரேஷன் முறை வெற்றிகரமாக நிறைவு பெற்றது
மேற்கண்ட வழிமுறைகள் எஸ்பிஐ வங்கியினை அடிப்படையாகக் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய சம்பள கணக்கு வங்கி வேறு ஏதேனும் வங்கியாக இருந்தாலும் பெரும்பான்மையான வழிமுறைகள் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான வகையிலே உள்ளது. அதனால் இந்த முறையை பின்பற்றி நீங்களேe Mandate செய்து கொள்ளலாம். ஆனால் உங்களுடைய வங்கி e MANDATE முறையை அனுமதிக்கிறதா? இல்லையா? என்பதை கீழே உள்ள அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
மேற்கண்ட அட்டவணை மாறுதலுக்கு உட்பட்டது எனவே நீங்கள் e MANDATE செய்யும் சமயத்தில் NPCI இன் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று மேற்கண்ட அட்டவணையை சரி பார்த்துக் கொள்ளலாம். அல்லது இங்கே கிளிக் செய்து NPCI ன் வலைதளத்திற்கு செல்லலாம்
மேற்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்களுடைய இமெயில் முகவரியுடன் கீழே கமெண்ட் செய்யவும் உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சரியான தகவல் அளிக்கப்படும்.
வாழ்க வளமுடன்