IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING
IOB BANK STATEMENT and LOAN STATEMENT
ஐ ஓ பி வங்கிக்கு நேரில் செல்லாமல் பேங்க் ஸ்டேட்மெண்டை 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதி எதுவுமே இல்லை என்றாலும் ஆன்லைனில் ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் செய்ய முடியும் அதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிரத்யேகமான சேவையை வழங்குகிறது இந்த முறையை பயன்படுத்தி சேவிங்ஸ் அக்கவுண்ட் மற்றும் நகை கடன் தனிநபர் கடன் வீட்டுக் கடன் போன்ற அனைத்து கடன்களுக்கான ஸ்டேட்மெண்ட் போன்றவற்றை சுலபமாக எடுக்கலாம்.
கூகுள் வலைதளத்தில் IOB STATEMENT என்று search செய்தோ அல்லது இங்கே கிளிக் செய்து ஐ ஓ பி பேங்க் ஸ்டேட்மெண்ட்டை டவுன்லோட் செய்வதற்கான வலைதளத்திற்கு செல்லலாம்
SELECT STATEMENT TYPE:
மேலே உள்ள லிங்க் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வலைதளத்திற்கு சென்ற பின்பு உங்களுக்கு கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்ற பக்கம் கிடைக்கும் அதில் உங்களுக்கு தேவையான Download SB statement for 6 month என்ற வசதியை தேர்வு செய்து NEXT என்ற பட்டனை அழுத்தவும்
TYPE 15 DIGIT ACCOUNT NUMBER, REGISTERED MOBILE NUMBER & SELECT DATE RANGE
அடுத்த பக்கத்தில் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டிய சேவிங்ஸ் அக்கவுண்ட் எண் மற்றும் வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணையும் சரியாக பதிவு செய்து உங்களுக்கு தேவையான ஆறு மாதத்திற்கு உள்ளான தேதியை தேர்வு செய்யவும். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்சா எண்ணை அதில் காண்பிக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்து NEXT என்ற பட்டனை அழுத்தவும் (குறிப்பு ; இதில் PAN NUMBER பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை)
ENTER OTP and press submit then the 6 month IOB STATEMENT WILL BE DOWNLOADED Automatically in to your device.
இப்பொழுது உங்களுடைய மொபைல் நம்பருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து ஒருமுறை கடவுச்சொல் OTP ஒன்று வரும் அதை நீங்கள் கீழ்கண்ட பக்கத்தில் உள்ளீடு செய்து SUBMIT என்று கொடுத்தால் உங்களுடைய ஸ்டேட்மெண்ட் அதாவது நீங்கள் தேர்வு செய்த தேதிக்குள்ளான ஸ்டேட்மெண்ட் ஆட்டோமேட்டிக்காக PDF வடிவில் உங்களுடைய மொபைல் or கணிப்பொறியில் சேமிக்கப்பட்டு விடும் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சேமிப்பு வங்கியில் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்டை டவுன்லோட் செய்யும் முறைக்கான வழிமுறையை மேலே படிப்படியாக பார்த்தோம். இதே முறையை பின்பற்றி (IOB LOAN ACCOUNT STATEMENT) உங்களுடைய லோன் அக்கவுண்டுக்கான ஸ்டேட்மெண்டையும் எடுக்க முடியும். அதற்கான வழிமுறையை கீழே பார்ப்போம் இங்கே நாம் DOWNLOAD LOAN STATEMENT என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும்
இங்கே லோன் அக்கவுண்ட் நம்பர், வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஸ்டேட்மெண்ட் காக தேதியை தேர்வு செய்வதற்கு பதிலாக இங்கே ஆண்டு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான நிதி ஆண்டை தேர்வு செய்து NEXT என்ற பட்டனை அழுத்தவும் இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் OTP வரும் அதனை உள்ளீடு செய்து ஒரு வருடத்திற்கான குறிப்பிட்ட லோன் எண்ணிற்குறிய அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்
ஒருமுறை கடவுச்சொல்லிற்கு (OTP) 15 செகண்ட் மட்டுமே validity உண்டு எனவே மிக விரைவான முறையில் மேற்கண்ட செயல்முறைகளை செய்ய வேண்டியது அவசியம். ஒருவேளை ஒரு முறை கடவுச்சொல் செய்த பின்பு session expired என்று வந்தால் மீண்டும் மேற்கண்ட லிங்கிற்கு வந்து முதலில் இருந்து வழிமுறைகளை பின்பற்றவும். உங்களுடைய மொபைலில் தான் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பது அவசியம் அல்ல. எனவே வேறு மொபைலில் நீங்கள் மேற்கொண்ட வழிமுறைகளை செய்து otp உங்கள் மொபைலில் பார்த்து உள்ளீடு செய்து விரைவாக முடிக்க முடியும்.