WHO CAN GET PERSONAL LOAN?
யாரெல்லாம் பர்சனல் லோன் எடுக்கலாம்?
யாரெல்லாம் பர்சனல் லோன் எடுக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்னர் பர்சனல் லோன் என்றால் என்ன? அது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? பர்சனல் லோன் எடுப்பதற்கு தேவையான தகுதிகள் என்ன? என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு பர்சனல் கிடைக்குமா, கிடைக்காதா அப்படியே கிடைத்தால் எவ்வளவு தொகை எடுக்கலாம்? என்பதை நீங்களே 50% புரிந்து கொள்ள முடியும்.
பர்சனல் லோன் என அழைக்கப்படும் தனிநபர் கடன் என்பது ஒரு தனி நபரின் மாத வருமானத்தையோ அல்லது வருட வருமானத்தையோ அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் ஒரு லோன் ஆகும். இவ்வாறு வழங்கப்படும் இந்த லோனிற்க்கு எந்தவிதமான சொத்துக்களையும் அடமானமாக வழங்க தேவையில்லை. அடமானம் எதுவும் இல்லாமலேயே அதிகபட்சமாக 40 லட்சம் வரை தனிநபர் கடனாக எடுத்துக் கொள்ளலாம் . ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நீங்கள் எவ்வளவு தொகை எடுத்தாலும் அதிகபட்சமாக 72 மாத காலங்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். அதாவது நீங்கள் வேறு விதமான அடமான கடன்கள் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் போன்றவை எடுக்கும் பொழுது அதற்கான கால அவகாசம் அதிகமாக வழங்கப்படும். ஆனால் அடமானம் எதுவுமே இல்லாத இந்த தனி நபர் கடன் எடுக்கும் பொழுது உங்களுக்கு வழங்கப்படும் திருப்பிச் செலுத்த வேண்டிய கால அவகாசம் அதிகபட்சமாக 72 மாதங்கள் வரை மட்டுமே. எனவே மற்ற கடன்களை ஒப்பிடுகையில் நீங்கள் மாதம் மாதம் செலுத்த வேண்டிய மாத தவணை தனி நபர் கடனுக்கு சற்று அதிகமாகவே இருக்கும்.
சரி!!! மாத வருமானத்தின் அடிப்படையில் எவ்வாறு கணக்கிடப்படுகிறது. தனிநபர் கடன் மட்டும் இன்றி வேறு எந்த வகை கடனாக இருந்தாலும் உங்களுடைய மாதத் தவணை என்பது நீங்கள் மாதம் மாதம் பெறும் உங்களுடைய வருமானத்தின் குறிப்பிட்ட தொகைக்குள் (சதவீதத்திற்குள்) இருக்க வேண்டும் அதாவது உங்களுடைய மாத வருமானத்தில் 40திலிருந்து அறுபது சதவீதத்திற்கு இடைப்பட்ட தொகையாக இருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் தற்பொழுது ஒரு கார் லோன் எடுத்து அதற்காக மாத தவணை கட்டி வருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம் உங்களுடைய மாத வருமானம் ரூபாய் 50,000/- உங்களுடைய கார் லோனுக்கான இஎம்ஐ ரூபாய் 10000/- ஆக இருந்தால் நீங்கள் நீங்கள் மேலும் பதினைந்தாயிரம் ரூபாய் மாத தவணை கட்டும் வகையில் புதியதாக ஒரு லோன் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த வகையில் தான் உங்களுடைய லோன் எடுக்கும் திறன் நிர்ணயிக்கப்படும்.
பொதுவாக வங்கிகள் ரூபாய் 25 ஆயிரம் அல்லது அதற்கு மேல் மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே தனி நபர் கடன் வழங்குகின்றன இதே நேரத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ரூபாய் 15,000 மாத சம்பளம் இருந்தாலே தனிநபர் கடன்கள் வழங்குகின்றன. இது அந்தந்த நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.
தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை பொருத்தவரையில் வங்கி சாரா நிதி நிறுவனங்களைக் காட்டிலும் நேரடியாக வங்கிகளில் எடுக்கும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் மிகக் குறைவாகவே இருக்கும் மிகக் குறைந்த வட்டி வீதமாக hdfc வங்கியின் தனிநபர் கடனுக்கு 10.25% சதவீதம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 30 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கின்றன. எனவே நீங்கள் தனிநபர் கடன் எடுப்பதாக இருக்கும் பட்சத்தில் அதற்கான வட்டி விகிதங்கள் என்ன செயலாக கட்டணம் என்ன போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கு நன்மை விளைவிக்கும். செயலாக்க கடன்களுமே வங்கிக்கு வங்கி அதன் அளவில் மாறுபடும் அதையும் தெளிவாக கேட்டுக் கொள்வது நல்லது.
சரி!! யார் யாரெல்லாம் தனி நபர் கடன் எடுக்க முடியும்? மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் (மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே அடங்கும்) தனியார் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சுய தொழில் செய்பவர்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனம் நடத்துபவர்கள், மருத்துவர்கள் போன்றோர் அடமானம் இல்லாத தனிநபர் கடன் பெற்றுக் கொள்ள முடியும். மாதச் சம்பளம் வாங்குபவர்களை தவிர அதாவது தொழில் செய்பவர்கள் உங்களுடைய வருமான வரி அறிக்கையின் அடிப்படையில் லோன் பெற்றுக் கொள்ளலாம்.
👉பர்சனல் லோன் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்