HDFC வங்கியில் UPI சேவை இந்த தேதியில் செயல்படாது
வங்கிகள் பராமரிப்பு பணிக்காக ஆன்லைன் பரிவர்த்தனைகளான நெட் பேங்கிங் மொபைல் பேங்கிங் போன்ற வசதிகளை அவ்வப்போது நிறுத்தி வைப்பது வழக்கம்
அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி ஆன எச்டிஎப்சி வங்கி வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி (08-02-2025) அதிகாலை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு UPI (GPAY, PHONE PAY, BHIM UPI Etc..) வசதியை பயன்படுத்த இயலாது என்று வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்தில் யுபிஐ வசதி, ரூபே கிரடிட் கார்டு மற்றும் மொபைல் பேங்கிங் வசதி செயல்படாது எனவும் வாடிக்கையாளர்கள் தங்களது பரிவர்த்தனைகளை முன் கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்பதை வங்கி அறிவுறுத்தியுள்ளது.