PERSONAL LOAN (A to Z) details in Tamil
பர்சனல் லோன் என்பது ஒரு தனிநபர் கடனாகும். பர்சனல் லோன் மூலம் நமக்கு தேவையான மற்றும் அத்தியாவசியமான காரியங்களை செய்ய முடியும். கடனுக்கான காரணத்தை ஆவணமாக சமர்ப்பிக்க தேவையில்லை.
உதாரணமாக நாம் வீட்டுக்கடன் அதாவது ஹோம் லோன் எடுத்தோம் என்றால் அந்த லோன் பணத்தை வைத்து வீடு மட்டும்தான் கட்ட முடியும் அல்லது வீடு வாங்க முடியும் அல்லது வீட்டை புதுப்பிக்க முடியும். இது அந்த லோன் எதற்காக எடுக்கிறோம் என்பதை பொறுத்தது.
இதேபோல் தான் கார் லோனாக இருக்கட்டும், பைக் லோனாக இருக்கட்டும் அல்லது வியாபார கடனாக இருக்கட்டும் அந்தந்த லோன் அதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனென்றால் நாம் அதற்கான பொறுப்பை கொடுக்க வேண்டியிருக்கும் அதாவது லோன் காரணத்திற்கான உத்திரவாத பத்திரங்களை வங்கியிடமோ அல்லது நம் லோன் எடுக்கும் நிதி நிறுவனத்திடமோ கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இதுபோன்ற கடன்கள் அடமான லோன் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் பர்சனல் லோன் என்பது ஒரு அடமானம் இல்லாத லோன் ஆகும்.
இது கடன் வழங்கும் நிறுவனத்தை காட்டிலும் எடுக்கும் வாடிக்கையாளருக்கு அதிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் என்பது நாம் நம்முடைய வீட்டை அலங்கரிப்பதற்கு, வீடு வாங்குவதற்கு, குழந்தைகளின் திருமண செலவுக்காக, குழந்தைகளின் உயர் கல்வி, சுற்றுலா செல்வதற்கு, நமது வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்ள என எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் நாம் அதற்கு எந்தவித உத்திரவாத ஆவணங்களையும் வங்கியிடமோ அல்லது கடன் வழங்கும் நிதி நிறுவனத்திடமோ வழங்க வேண்டியது இல்லை. எனவே மற்ற கடன்களை காட்டிலும் பர்சனல் லோன் என்பது மிகவும் விரைவாகவும் துல்லியமாகவும் நமது கிடைக்கிறது, மேலும் நீங்கள் லோன் எடுக்கும் அனைத்து பணமும் உதாரணமாக 40 லட்சம் நீங்கள் லோன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் 40 லட்சம் பணமும் மொத்தமாகவே ( செயலாக்க கட்டணம் போன்ற கட்டணங்கள் கழித்து ) உங்கள் வங்கி கணக்கில் ஒரே முறையில் வழங்கப்படும் ஆனால் வீட்டு கடனில் அப்படி அல்ல வீடு கட்டுவதற்காக கடன் வாங்குவதாக இருந்தால் நீங்கள் எடுக்கும் முன்பணம் மூன்று தவணையாக மட்டுமே உங்கள் கணக்கில் வரவு வரவு வைக்கப்படும் எனவே மற்ற கடன்களை காட்டிலும் தனிநபர் கடன் என்பது வாடிக்கையாளருக்கு மிகவும் வசதியாக உள்ளது
OFFER OFFER OFFER இன்றைய தனிநபர் கடனுக்காக ஆஃபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
தனிநபர் கடனுக்கும் மற்ற கடன்களுக்கும் உள்ள வட்டி விகித வித்தியாசம்
தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் எப்பொழுதும் சற்று அதிகமாகவே காணப்படும். உதாரணமாக நீங்கள் எடுக்கும் வீட்டுக்கு கடனுக்கான வட்டியோ கார் கடனுக்கான வட்டியோ தனிநபர் கடன் வட்டியை காட்டிலும் மிகவும் குறைவாகவே இருக்கும் ஏனென்றால் வீட்டுக் கடன் அதிகபட்சம் 30 வருடங்களுக்கும் கார் கடன் அதிகபட்சம் ஏழு வருடங்களுக்கும் வழங்கப்படும். ஆனால் கடன் முடியும் வரையில் அந்த வீட்டையோ அந்தக் காரையோ நீங்கள் அந்த நிதி நிறுவனத்திடம் அடமானமாக வைக்க வேண்டும். ஆனால் தனிநபர் கடன் அதிகபட்சமாக ஆறு வருடங்கள் வரை மட்டுமே வழங்கப்படும் இதற்கு எந்தவித அடமானமும் தேவையில்லை. அதே நேரத்தில் எந்தவித மூன்றாம் நபரின் கேரண்டி கையெழுத்தோ கூட தேவையில்லை
ஆனால் ஒரு கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? என்பது நாம் எடுக்கும் கடன் தொகை, லோனுக்கான கால அவகாசம், லோன் எடுக்கும் பொழுது நமக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் ஆகிவை பொறுத்து நாம் சில முடிவுக்கு வரலாம்.
இப்பொழுது வீட்டுக் கடன் எடுப்பதாக வைத்துக் கொள்வோம் வீட்டுக் கடனுக்கு ஆவணச் செலவுகள் அதாவது பத்திர செலவு, வில்லங்கச் சான்று செலவு, பத்திரப்பதிவு செலவு, நில அளவிட்டாலர் செலவு, கடன் செயலாக கட்டணம் (ப்ராசசிங் பீஸ்) போன்றவை பொறுத்து நம் எடுத்த கடன் தொகைக்கும் கடன் முடிவு காலத்தில் நாம் கட்டும் மொத்த தொகைக்கும் அதாவது வட்டியுடன் சேர்த்து கட்டும் மொத்த தொகைக்கும் உள்ள வித்தியாசம் நாம் கடன் வாங்கும் தொகையை காட்டிலும் இரு மடங்கோ அல்லது அதற்கு மேலும் அதிகமாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் தனி நபர் கடன் எடுப்பதாக இருக்கும் பட்சத்தில் நமக்கு லோன் செயலாக்க கட்டணம் தவிர வேறு எந்த செலவுகளும் இருக்க வாய்ப்பு இல்லை காரணம் இதில் வேறு எந்த ஆவணங்களும் சரிபார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே செலவினங்களை ஒப்பிடும் பொழுது தனிநபர் கடனுக்கான செலவு மிக குறைவாகவே இருக்கும் இன்னும் விரிவாக பார்த்தோம் என்றால் வட்டி விகிதம் மற்ற கடன்களை காட்டிலும் இரண்டு அல்லது மூன்று சதவீதம் அதிகமாக இருக்கலாம் ஆனால் பர்சனல் லோன் என்பது குறைந்த கால லோன் ஆகும். அதிகபட்சமாக ஆறு வருடங்கள் வரை மட்டுமே லோன் காலம் நிர்ணயிக்கப்படும், எனவே நீங்கள் கட்டும் வட்டி அல்லது கட்டி முடிக்கும் பொழுது உள்ள மொத்த தொகை மிக குறைவாகவே இருக்கும் உதாரணமாக 10 லட்சம் ரூபாய் 11 சதவீத வட்டியில் நாம் தனி நபர் கடனாக எடுக்கும் பொழுது ஆறு வருடம் முடிவில் தோராயமாக 13 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நாம் கட்டியிருப்போம் அதாவது 10 லட்சத்திற்கு 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வட்டி. இதே லோனை நீங்கள் ஐந்து வருடத்தில் கட்டி முடிக்கும் படி லோன் எடுத்தீர்கள் என்றால் பத்து லட்சத்திற்கான ஐந்து வருடத்திற்கு மொத்த வட்டி 3 லட்சத்து 4 ஆயிரம் ஆக இருக்கும்.
இதே லோனை நாம் வீட்டுக் கடனாக தோராயமாக எட்டு சதவீதத்தில் 15 வருட கால அவகாசத்தில் எடுத்தோம் என்றால் வட்டி மட்டும் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டியது இருக்கும் அதாவது லோன் முடியும் பொழுது நீங்கள் கட்ட வேண்டிய மொத்த தொகை பத்து லட்சம் ரூபாய் கடனுக்கு 17 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக இருக்கும். ஆனால் தனி நபர் கடனில் கடனுக்கான கால அவகாசம் குறைவாக இருக்கும் பொழுது மாத தவணைத் தொகை அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் வீட்டுக் கடனில் கால அவகாசம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அதில் மாத தவணை குறைவாக இருக்கும் எனவே ஒரு லோன் எடுத்து விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இருக்கும் பொழுதும், லோன் எடுக்கும் மொத்த தொகையும் ஒரே நேரத்தில் நமது வங்கி கணக்கிற்கு வரவேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும் பொழுதும், வீடு கட்டுவது தவிர்த்து வேறு ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் லோன் எடுப்பதாக காரணம் இருக்கும் பொழுதும் உங்களுக்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பெர்சனல் லோனுக்கு கியாரண்டி கையெழுத்து தேவையா??
சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கேரண்டி கையெழுத்து இருந்தால் மட்டுமே தனிநபர் கடன் வழங்கும் (உதாரணமாக கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) அவ்வாறு கியாரண்டி கையெழுத்து போடும் இரண்டு நபர்களும் உங்களுக்கு இணையாகவோ அல்லது உங்களை காட்டிலும் அதிகமாக வருமானம் ஈட்டும் நபராக இருக்கவேண்டும் மேலும் இந்த கியாரண்டி கையெழுத்து போடுபவர் உங்களுடைய கடன் கணக்கில் ஒரு அங்கத்தினராக கருதப்படுவார். பிற்காலத்தில் எப்பொழுதாவது கேரண்டி கையெழுத்து போட்ட நபர் வேறு ஒரு வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கும் நிலை வந்தால் அவருக்கு லோன் எடுக்கும் தகுதி குறைக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும் ஏனென்றால் அவருடைய சிபில் ஸ்கோர் உங்களுடைய கடனோடு இணைக்கப்பட்டு இருக்கும்.
எனவே நீங்கள் தனிநபர் கடன் எடுப்பதாக முடிவு செய்யும்பொழுது கியாரண்டி கையெழுத்து கேட்காத வங்கிகள் மூலம் தனிநபர் கடன் எடுப்பது உங்களுக்கு பிற்காலத்திலும் நன்மை பயப்பதாக இருக்கும். கியாரண்டி கையெழுத்து இல்லாமல் லோன் எடுக்கும் பொழுது நமக்கு வட்டிவிகிதம் ஏதேனும் அதிகமாக இருக்குமா என்ற ஐயம் ஏற்படலாம். உண்மையில் கியாரண்டி கையெழுத்திற்கும் கடனுக்கான வட்டி விகிதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அவர்களுடைய வங்கியில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே லோன் வழங்குவார்கள் வேறு ஒரு வங்கியில் சம்பள கணக்கு வைத்திருந்தால் சில வங்கிகள் அந்த சம்பள கணக்கை தங்கள் வங்கிகளுக்கு மாற்றினால் மட்டுமே தனிநபர் கடன் வழங்க முடியும் என்று கூறுவார்கள் இது அவர்களுடைய வங்கியின் நிபந்தனை விதி. பல தனியார் நிதி நிறுவனங்களும் பல தனியார் வங்கிகளும் எந்தவிதமான கியாரண்டி கையெழுத்தும் இல்லாமல் மிகக் குறைந்த வட்டியில் லோன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன உதாரணமாக எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகள் எந்தவிதமான கேரண்டி கையெழுத்து இல்லாமல் கடன் வழங்குகிறது மேலும் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.
லோனை பாதி காலத்திலேயே கட்டி முடிக்கலாமா?
தனிநபர் கடனுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தான் உங்களிடம் பணம் இருந்தாலும் உங்களுடைய கடனை மொத்தமாக அடைக்க முடியும், ஒவ்வொரு வங்கிக்கும் அந்தக் கால அவகாசம் வேறுபடுகிறது ஆனால் நீங்கள் சம்பள கணக்கு வைத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனிநபர் கடன் எடுக்கும்பொழுது நீங்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் அல்லது இரண்டு மாதத்திற்கு பின்னர் கூட அந்த லோனை மொத்தமாக கட்டி முடிக்க அனுமதிக்கப் படுவீர்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் எடுத்த லோன் காலத்திற்கு முன்னதாக நீங்கள் அந்த லோனை கட்டி முடிக்கும் பொழுது உங்களுக்கு அபராத வட்டியாக உங்களுடைய லோன் கணக்கில் இருக்கும் அசல் தொகைக்கு தகுந்தார்போல் தொகை வசூலிக்கப்படும். இது அனைத்து வங்கிகளிலும் பொதுவான ஒரு விதியாக இருக்கிறது ஆனால் சில வங்கிகள் லோன் தொகை அதிகமாக இருக்கும் பொழுது இந்த அபராத வட்டியை வசூலிப்பதில்லை. எடுத்துக்காட்டாக எச்டிஎஃப்சி வங்கியில் நீங்கள் 10 லட்சமோ அல்லது பத்து லட்சத்திற்கு அதிகமாகவோ தனிநபர் கடன் எடுக்கும் எடுத்து 12 மாதங்கள் கழிந்த பின்னர் (அதாவது லோன் எடுத்து 12 இஎம் ஐ கட்டி முடித்த பின்னர்) நீங்கள் அந்த கடனை மொத்தமாக அடைக்க விரும்பினால் அந்த கடனில் இருக்கும் அசல் தொகையை மட்டும் கட்டினால் போதுமானது வேறு எந்தவிதமான மறைமுக கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
தனிநபர் கடன் வாங்குவதற்கு மிக குறைந்த ஆவணங்களே போதுமானது. மேலும் ஆவணங்கள் அனைத்தும் நகலாக வழங்கினாலே போதுமானது. ஆனால் அனைத்து ஆவணங்களின் அசல் ஆவணங்களை நேரில் காண்பிக்க வேண்டும்.
CLICK HERE FOR PERSONAL LOAN DOCUMENTS
OFFER OFFER OFFER இன்றைய தனிநபர் கடனுக்காக ஆஃபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்