நகை கடனை விட குறைந்த வட்டியில் பர்சனல் லோன்
பர்சனல் லோன் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருவது மிக அதிக வட்டி விகிதம், மற்ற லோன்களை ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் கடன் எடுக்கும் நிலையில் முதலில் விசாரிப்பது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? என்பதிலிருந்து தான் அவருடைய லோன் எடுக்கும் வழிமுறைகள் தொடங்குகிறது. பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் அதனுடைய வட்டி வீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு நபர் நகை கடன் தற்போதைய சூழலில் எடுக்கும் பொழுது அதற்கான வட்டி வீதம் 9. 15% இருந்து தொடங்குகிறது. எனவே பத்து லட்சத்திற்கு நகை கடன் எடுக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அதற்கான வட்டி ரூபாய் 91,500 ஆகும். இப்பொழுது அந்த நபர் அந்த நகை கடனை கட்டி முடிக்காமல் மீண்டும் அடகு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அடுத்த வருடமும் இதேபோன்று வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறாக தொடர்ந்து ஐந்து வருடம் கட்டினால் இந்த ஐந்து வருடங்களில் அவர் கட்டிய மொத்த தொகை ...