நகை கடனை விட குறைந்த வட்டியில் பர்சனல் லோன்

பர்சனல் லோன் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருவது மிக அதிக வட்டி விகிதம்,  மற்ற லோன்களை ஒப்பிடும் பொழுது பர்சனல் லோன் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு நபர் கடன் எடுக்கும் நிலையில் முதலில் விசாரிப்பது கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? என்பதிலிருந்து தான் அவருடைய லோன் எடுக்கும் வழிமுறைகள் தொடங்குகிறது. 

பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் அதனுடைய வட்டி வீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது.
 எடுத்துக்காட்டாக ஒரு நபர் நகை கடன் தற்போதைய சூழலில் எடுக்கும் பொழுது அதற்கான வட்டி வீதம் 9. 15% இருந்து தொடங்குகிறது. 

எனவே பத்து லட்சத்திற்கு நகை கடன் எடுக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் அந்தக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது அதற்கான வட்டி ரூபாய் 91,500 ஆகும். இப்பொழுது அந்த நபர் அந்த நகை கடனை கட்டி முடிக்காமல் மீண்டும் அடகு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அடுத்த வருடமும் இதேபோன்று வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறாக தொடர்ந்து ஐந்து வருடம் கட்டினால் இந்த ஐந்து வருடங்களில் அவர் கட்டிய மொத்த தொகை பத்து லட்சத்திற்கான வட்டி ரூபாய் நான்கு லட்சத்து 57 ஆயிரத்து 500 ஆகும்.‌ 

ஆனால் அதே நபர் பத்து லட்சத்திற்கு 5 வருட காலத்திற்கு பர்சனல் லோன் எடுத்தால் அதற்கான வட்டி விகிதம் 10.9% இருக்கும் பொழுது 5 வருடத்தில் அவர் கட்டும் மொத்த வட்டி ரூபாய் 3,01,557/- மட்டுமே.‌ 

எனவே அந்த நபர் நகை கடன் எடுக்காமல் பர்சனல் லோன் எடுத்ததன் மூலம் அவர் ஐந்து வருடத்தில் வட்டியில் சேமித்த தொகை ஒரு லட்சத்து 50 ஆயரம் ரூபாய்.

தற்போதைய காலத்தில் பர்சனல் லோன் எடுப்பது மிக மிக சுலபமான வசதியாக இருக்கிறது ஆனால் லோன் எடுக்கும் பொழுது எந்த வங்கியில் எவ்வளவு கடன் எடுத்தால் நமக்கு குறைவான வட்டி விகிதத்தில் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்து எடுப்பது மிக மிக முக்கியமாகும். பிற பொதுத்துறை வங்கிகளை காட்டிலும் தற்போது தனியார் வங்கிகள் மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகின்றன. அவ்வாறு பார்க்கும் பொழுது ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கிகள் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் பர்சனல் லோன் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் அதாவது 10.9% ல் கடன்கள் வழங்குகின்றன.

ஹெச்டிஎஃப்சி வங்கி பொருத்தவரையில் நீங்கள் எடுக்கும் கடன் தொகை கூட கூட உங்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக 15 லட்சத்திற்கு மேல்  லோன் எடுக்கும் பொழுது உங்களுடைய வட்டி விகிதம் 10.8 சதவீதமாக இருக்கிறது.

எச்டிஎப்சி வங்கியில் பத்து லட்சம் அல்லது அதற்கு மேல் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக நீங்கள் 12 மாத தவணைக்கு பிறகு உங்களுடைய கடனை மொத்தமாக கட்டி முடிக்க விரும்பினால் அன்றைய தேதியில் உள்ள அசல் தொகை மட்டும் செலுத்தி கடனை முழுமையாக முடித்துக் கொள்ளலாம் வேறு எந்த விதமான அபராத வட்டியும் இல்லை ( Nil Foreclosure charges) இந்த சிறப்பு சலுகை 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் நேர ஊதியமாக பெறும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தது 10 லட்சம் அல்லது அதற்கு மேல் லோன் எடுக்கும் பொழுது இந்தச் சலுகை வழங்கப்படுகிறது...

பிற அரசு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பர்சனல் லோனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 11. 4 சதவீதத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள,  உங்களுடைய விருப்பமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள,  உங்களுடைய குழந்தைகளின் மேற்படிப்பு போன்ற எந்த ஒரு தேவைக்கும் நீங்கள் பர்சனல் லோன் எடுக்க விரும்பினால் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற வங்கிகளில் 10 முதல் அதிகபட்சமாக 75 வரை கடன் குறைந்த வட்டியில் பெற்று உங்களுடைய வட்டிச் சுமையை குறைத்துக் கொள்ளலாம். 
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றோர்களில் 50 ஆயிரம் அல்லது அதற்கு மேலாக நிகர ஊதியமாக வங்கிக் கணக்கில் பெரும் நபர்கள் இதுபோன்ற குறைந்த வட்டியில் வங்கிகளில் கடன் பெற்று லாபம் பெற முடியும். குறைந்தபட்சம் 10 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ஒரு நபருக்கு 75 லட்சம் வரை அடமானம் இல்லாமல் கடன்கள் வழங்கப்படுகிறது மேலும் உடன் பணி புரியும் உயர் அதிகாரியிடமோ அல்லது வேறு ஏதேனும் மூன்றாவது நபர்களிடமோ கேரண்டி கையெழுத்து வாங்க தேவையில்லாத காரணத்தினால் இதுபோன்ற பர்சனல் லோன் மிக மிக உதவிகரமாக இருக்கிறது. 


 மேலும் பர்சனல் லோன் வழங்கும் கால அவகாசம் மிக மிக குறைவாகவே இருக்கிறது விண்ணப்பித்து மூன்று அல்லது நான்கு நாட்களில் உங்களுடைய வங்கி கணக்கில் பர்சனல் லோனுக்கான தொகை வரவு வைக்கப்படுகிறது மேலும் இதில் சிறப்பம்சமாக 12 மாத தவணைக்குப் பிறகு நீங்கள் கடனை மொத்தமாக கட்டி முடிக்க விரும்பினால் அன்றைய தேதியில் உள்ள அசல் தொகையை மட்டும் கட்டி வேறு எந்த விதமான அபராத தொகையும் கட்டாமல் நீங்கள் கடனை முடித்துக் கொள்ள முடியும். 

தற்பொழுது வேறு ஏதேனும் வங்கியில் பர்சனல் லோன் எடுத்து மாத தவணை முறையில் கட்டி வரும் நபராக இருந்தாலும் நீங்கள் புதிதாக லோன் விண்ணப்பித்து அந்தக் கடனை குறைந்த வட்டியில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS