NRI PERSONAL LOAN
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தனி நபர் கடன்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தனிநபர் கடன் பற்றி காணலாம் இன்று உலகமே நமது உள்ளங்கையில் என்பது போல ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று பணி புரிவது என்பது மிகவும் சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. திருமணச் செலவு, கல்வி, வீட்டு பராமரிப்பு போன்ற ஏதேனும் காரணங்களுக்காக வங்கியில் கடனுக்காக விண்ணப்பிக்க நீங்கள் விரும்பலாம்.
என்னதான் வெளிநாட்டில் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் தனிநபர் கடன் ( NRI PERSONAL LOAN) வழங்குவதில்லை. ஒரு சில வங்கிகளே குறிப்பாக ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற தனியார் வங்கிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தனிநபர் கடனை வழங்குகின்றன.
வங்கியில் தனிநபர் கடனுக்காக விண்ணப்பிக்க விரும்பும் பட்சத்தில், நீங்கள் ஏதேனும் ஒரு வங்கியில் NRI/NRE/NRO அக்கவுண்ட் ஓபன் செய்து உங்களுடைய பணத்தை NRI அக்கவுண்ட் மூலமாக பரிவர்த்தனை செய்து வர வேண்டும். NRI அக்கவுண்டில் சரியான பரிவர்த்தனை இல்லாத நபர்களுக்கு தனி நபர் கடன் வழங்க இயலாமல் போக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெளிநாட்டில் நீங்கள் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும், இந்தியாவிற்கு NRI அக்கவுண்ட் மூலமாக நீங்கள் அனுப்பும் பணமே லோனுக்கான தகுதி பணமாக (ELIGIBLE INCOME) எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும் NRI தனிநபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது, வெளிநாட்டில் வாழும் இந்தியருடன் சேர்த்து இந்தியாவில் வாழும் அவருடைய ரத்த சொந்தத்தில் உள்ள ஒரு இணை விண்ணப்பதாரரும்(Co Applicant) இருக்க வேண்டியது அவசியம்.
உங்களுக்கு அப்ரூவல் செய்யப்பட்ட லோன் பணம் உங்களுடைய NRO வங்கி கணக்கில் தான் வரவு வைக்கப்படும். ஆனால் மாத தவணை NRE அக்கவுண்டில் இருந்து எடுத்துக் கொள்ளும்படி செயல்படுத்தப்படும் எனவே NRE & NRO ACCOUNT இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
NRI தனிநபர் கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை பற்றி பார்ப்போம். ( Required documents for NRI PERSONAL LOAN )
APPLICANT ( விண்ணப்பதாரர் )
1. PHOTO 1
2. PAN CARD COPY
3. ADDRESS PROOF COPY
4. OWN HOUSE PROOF ( வீட்டு வரி ரசீது அல்லது மின்சார வாரிய கட்டண ரசீது போன்றவை)
5. PASSPORT COPY (முத்திரையிடப்பட்ட அனைத்து பக்கங்களும் நகல் எடுக்க வேண்டும்)
6. CDC COPY - Continuous Discharge Certificate (முத்திரையிடப்பட்ட அனைத்து பக்கங்களும் நகல் எடுக்க வேண்டும் - கடல்சார் தொழிலாளர்கள் மட்டும்)
7. LAST 6 MONTH PAYSLIP
8. LAST 6 MONTH BANK (NRI & NRO ACCOUNT) STATEMENT of any bank
9. OFFER LETTER COPY/ APPOINTMENT LETTER COPY
Co APPLICANT ( இணை விண்ணப்பதாரர்)
1. PHOTO 1
2. PAN CARD COPY
3. ADDRESS PROOF
4. BANK STATEMENT (3 to 6 month)
முக்கிய குறிப்பு:
முகவரி சான்று விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரர் இருவருக்கும் ஒரே முகவரியில் இருக்க வேண்டியது கட்டாயம். ( Address proof should be same address for Applicant and Co-Applicant)
NRI தனிநபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் நாளிலிருந்து விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் வரை விண்ணப்பதாரர் இந்தியாவில் இருக்க வேண்டியது அவசியம்.
மேற்குறிய அனைத்து ஆவணங்களின் நகலையும் விண்ணப்பிக்கும் பொழுது நேரில் காண்பிக்க வேண்டியது இருக்கும்.
இணை விண்ணப்பதாரர் பணி புரிபவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ( No income proof required for Co Applicant )
பெர்சனல் லோன் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மேலும் விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் தேவையெனில் தயங்காமல் அழையுங்கள்.