பர்சனல் லோன் என்றால் என்ன? பர்சனல் லோன் பற்றிய ஒரு பார்வை பர்சனல் லோன் என்பது ஒரு தனிநபர் கடனாகும். பர்சனல் லோன் மூலம் நமக்கு தேவையான மற்றும் அத்தியாவசியமான காரியங்களை செய்ய முடியும். கடனுக்கான காரணத்தை ஆவணமாக சமர்ப்பிக்க தேவையில்லை. உதாரணமாக நாம் வீட்டுக்கடன் அதாவது ஹோம் லோன் எடுத்தோம் என்றால் அந்த லோன் பணத்தை வைத்து வீடு மட்டும்தான் கட்ட முடியும் அல்லது வீடு வாங்க முடியும் அல்லது வீட்டை புதுப்பிக்க முடியும். இது அந்த லோன் எதற்காக எடுக்கிறோம் என்பதை பொறுத்தது. இதேபோல் தான் கார் லோனாக இருக்கட்டும், பைக் லோனாக இருக்கட்டும் அல்லது வியாபார கடனாக இருக்கட்டும் அந்தந்த லோன் அதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனென்றால் நாம் அதற்கான பொறுப்பை கொடுக்க வேண்டியிருக்கும் அதாவது லோன் காரணத்திற்கான உத்திரவாத பத்திரங்களை வங்கியிடமோ அல்லது நம் லோன் எடுக்கும் நிதி நிறுவனத்திடமோ கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இதுபோன்ற கடன்கள் அடமான லோன் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் பர்சனல் லோன் என்பது ஒரு அடமானம் இல்லாத லோன் ஆகும். இது கடன் வழங்கும் நிறுவனத்தை காட்டிலும் எடுக்கும் வாடிக்கைய...