Pending EMI payment in G-PAY

HDFC BANK PERSONAL LOAN BOUNCED EMI PAYMENT IN G-PAY

CHECK BELOW FOR VIDEO TUTORIAL

ஏதேனும் சில காரணங்களினால் உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து இஎம்ஐ எடுக்க முடியாமல் போனால், உங்களுக்கு இஎம்ஐ கட்ட முடியாமல் போனதற்கும், அதற்கு பின்னர் நீங்கள் தாமதமாக கட்டும் நாட்களுக்கும் சேர்த்து அபராத தொகை கட்ட வேண்டியது இருக்கும். எனவே இஎம்ஐ தவறிய உடனே அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ நாம் இ எம் ஐ கட்ட வேண்டியது மிக மிக அவசியம்.
 
 

லோன் எடுத்த முதல் மாதத் தவணை நீங்கள் வழங்கிய காசோலையின் மூலமாக பிடித்தம் செய்யப்படும். இரண்டாவது தவணையில் இருந்து ஈசிஎஸ் (ECS/ACH/NACH) முறையில் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு இசிஎஸ் முறையில் பிடித்தம் செய்யப்பட வேண்டிய மாதத்தின் முதல் மாதத்தில் அதாவது நீங்கள் லோன் எடுத்து இரண்டாவது இஎம்ஐ ஆட்டோமேட்டிக்காக போகவில்லை என்றால் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்.

 எடுத்துக்காட்டாக நீங்கள் லோன் எடுக்கும் பொழுது போட்ட கையெழுத்தும் உங்கள் சேமிப்புக் கணக்கு வங்கியில் நீங்கள் போட்டிருக்கும் கையெழுத்தும் ஒத்துப் போகாமல் இருக்கலாம், சிறு பிழை இருந்தாலும் ஈசிஎஸ் முறை நிராகரிக்கப்படும் எனவே இரண்டாவது தவணையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது நன்மை பயக்கும்


EMI கட்ட வேண்டிய தேதியில் இ எம் ஐ கட்ட முடியாமல் போகும் சமயத்தில் கூகுள் பே மூலமாக கட்டும் வசதி உள்ளது அல்லது நீங்கள் ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் உங்களுடைய லோன் அக்கவுண்ட் நம்பரில் பணமாக கட்டலாம்.

கூகுள் பே மூலமாக பணம் கட்டுவதாக இருந்தால் நீ உங்களுக்கு லோனுக்கான சேவை வழங்கிய அதிகாரியையோ அல்லது வங்கி ஊழியரையோ தொடர்பு கொண்டு விசாரித்து பின்னர் கூகுள் பே மூலமாக கட்டலாம் கூகுள் பிளே மூலமாக தவறிய தவணை தொகையை கட்டும் முறையை படிப்படியாக இங்கே பார்ப்போம்

STEP 1
கூகுள் பே பக்கத்தை திறந்து நியூ பேமெண்ட் ( New payment) பகுதியை அழுத்தவும்





STEP 2

இதில் UPI ID or QR என்று இருக்கும் வசதியை தேர்வு செய்யவும்




STEP 3

இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் UPI ID  என்ற வகையை தேர்வு செய்யவும்





STPE 4

இப்பொழுது உங்களுக்கு ஒரு புதிய பகுதி பக்கம் ஓபன் ஆகும் இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல தேவையான UPI IDயை நீங்கள் டைப் செய்ய வேண்டும். அதில் XXXXXXXX இருக்கும் இடத்தில் அதற்கு பதிலாக உங்களுடைய லோன் நம்பரை டைப் செய்ய வேண்டும்

கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று சரியான ஐடியை டைப் செய்த பின்னர் VERIFY என்ற பட்டனை அழுத்தவும்.

குறிப்பு: லோன் நம்பரை டைப் செய்யும் பொழுது ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள் மாறினால்‌ நீங்கள் செலுத்தும் பணம் வேறு ஒருவருடைய லோன் கணக்கிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது



STEP 5

VERIFY பட்டனை அழுத்திய பின்பு கீழே காணும் படத்தில் உள்ளது போல HDFC BANK LTD COLLECTION ASSET என்று வரும் மேலும் அதற்கு கீழே நீங்கள் டைப் செய்த UPI ID யும் உங்கள் லோன் நம்பர் உடன் வரும் அப்படி வந்தால் OK பட்டனை அழுத்தி பணத்தை செலுத்தலாம்.




மேற்கண்ட முறையில் பணம் செலுத்திய பின்பு உங்களுடைய G Pay Transaction history  சென்று பணம் செலுத்தியதற்கான ரசீதை உங்களுடைய லோன் அதிகாரிக்கோ அல்லது வங்கியில் இருந்து தொடர்பு கொண்ட நபருக்கோ அனுப்பி நீங்கள் Verify செய்து கொள்ளலாம்

மேற்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் பகுதி உங்களுக்கு புரியாமல் இருந்தாலும் அல்லது தவறாக தெரிந்தாலோ உங்களுடைய eMail ID யுடன்‌ சேர்த்து கீழே கமெண்ட் செய்யுங்கள் உங்களுக்கு 48 மணி நேரத்திற்கு உள்ளாக அதற்கான சரியான பதில் வழங்கப்படும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS