SBI - YONO ACCOUNT STATEMENT DOWNLOAD
SBI -YONO அப்ளிகேஷன் மூலம் பேங்க் ஸ்டேட்மெண்ட் டவுண்லோடு செய்வது எப்படி?
நீங்கள் வங்கியில் லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது உங்களிடம் (SALARY BANK ACCOUNT) சேலரி அக்கவுண்டில் உள்ள கடைசி மூன்று மாதமோ! அல்லது அதற்கு மேல் உள்ள மாதங்களின் வங்கி பரிவர்த்தனை விவரங்கள் (BANK ACCOUNT STATEMENT) கேட்பார்கள். அப்படி கேட்கும் பட்சத்தில் நாம் நம்முடைய வங்கிக் கிளைக்குச் சென்று REQUEST லெட்டர் எழுதிக் கொடுத்து நம்முடைய ACCOUNT STATEMENTஐ பெற்றுக் கொள்ளலாம்( கட்டணம் வசூலிக்கப்படும்).
ஆனால் அதற்கு மாற்றாக உங்களிடம் SBI YONO அப்ளிகேஷன் இருந்தால் அதில் நீங்களே உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட் - ஐ (SBI BANK STATEMENT) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அது எவ்வாறு என்பதை இங்கே விரிவாக பார்ப்போம் அதிகபட்சமாக 2 நிமிடத்தில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து முடித்து விடலாம்.
STEP 1
கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்ற முதல் பக்கத்தில் LOGIN என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது M- PIN மூலமாகவோ அல்லது உங்களுடைய யூசர் ஐடி பாஸ்வேர்ட் மூலமாகவோ நீங்கள் YONO அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளலாம்.
STEP 2
STEP 3
இப்பொழுது உங்களுக்கு கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்ற புதிய பக்கம் கிடைக்கும். அதில் உங்களுடைய சேமிப்பு கணக்கு எண் மற்றும் வங்கி கிளையின் பெயர் குறிப்பிடப்பட்டு வங்கி கணக்கில் உள்ள தொகை தெரியும். அந்த தொகைக்கு அடுத்த படியாக உள்ள சிறிய அம்புக்குறியை தேர்ந்தெடுக்கவும்.
STEP 4
இப்பொழுது உங்களுடைய வங்கி பரிவர்த்தனைகள் ஒன்றன்பின் ஒன்றாக கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்று தெரியும். அதில் முதலாவது பரிவர்த்தனையின் தொகைக்கு மேல் இரண்டு சிறிய குறியீடுகள் இருக்கும். அதில் பாஸ் புக் போன்று உள்ள முதலாவது குறியீட்டை தேர்ந்தெடுக்கவும். (இரண்டாவது குறியீடு தேர்ந்தெடுத்தால் உங்களுடைய ACCOUNT STATEMENT நீங்கள் வங்கியில் பதிவு செய்திருக்கும் இமெயில் ஐடிக்கு வரும்).
STEP 5
பாஸ்புக் போன்ற குறியீட்டை தேர்ந்தெடுக்கும் பொழுது உங்களுடைய வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யப்பட்ட கடைசி 150 பரிவர்த்தனைக்குரிய பேங்க் ஸ்டேட்மென்ட் PDF பிடிஎப் வடிவில் உங்களுடைய கைபேசியில் தானாக சேவ் ஆகிவிடும். அதை நீங்கள் உங்களுடைய கைபேசியில் ஃபைல் மேனேஜரில் (FILE MANAGER) சென்று பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஸ்டேட்மெண்ட் ஒரு பாஸ்வேர்டை கொண்டு பாதுகாக்கப்பட்டு இருக்கும். அந்த பாஸ்வேர்ட் உங்களுடைய பிறந்த தேதி, உங்களுடைய கைப்பேசி எண்ணின் கடைசி நான்கு இலக்க எண் மற்றும் ஒரு சிறப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும் அதற்கான வழிமுறை உங்களுக்கு கீழ்காணும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்று தோன்றும். அந்த (FORMAT) ஃபார்மட்டை பயன்படுத்தி உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட்டை நீங்கள் ஓபன் செய்து கொள்ளலாம்
மேற்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்களுடைய இமெயில் முகவரியுடன் கீழே கமெண்ட் செய்யவும் உங்களுக்கு சரியான உறுதி செய்யப்பட்ட பதில் அனுப்பப்படும்.
வாழ்க வளமுடன்...