STUDENTS SIGNATURE IN TAMIL IS COMPULSORY
ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களும் தமிழில் தான் கையெழுத்து போட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
பள்ளி பருவத்தில் அடிக்கடி நாம் கேட்கும் அறிவுரைகளில் முக்கியமானது கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும்.
மேலும் அனைவருக்கும் கையெழுத்தை அழகாக போட்டு பார்ப்பது என்பது ஒரு அலாதி பிரியமாக இருக்கும். பள்ளி பருவமான சிறு வயது முதல் கல்லூரி வரும் காலங்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கையெழுத்தாக வருடத்திற்கு ஏற்றார் போல் ஸ்டைலாக நாம் மாற்றிக் கொண்டே வந்த காலங்கள் நினைவுக்கு வரலாம்.
ஆனால் 18 வயது வந்த பிறகு அரசு ஆவணங்களின் நாம் கையெழுத்து போடும் காலம் வந்த பிறகு அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரியான கையெழுத்தை போடுவது கட்டாயமாக்கப்படுகிறது. அவ்வாறு போடும் கையெழுத்து நமது தாய் மொழியிலும் ஒரு ஆங்கிலத்திலும் பொதுவாக இருக்கலாம்.
இவ்வாறு தமிழ்நாட்டில் பிற மொழிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித்துறை சில வருடங்களுக்கு முன்பு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய கையெழுத்தை தமிழில் தான் போட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது அனைவரும் அறிந்ததே. அன்று முதல் ஆசிரியர்கள் பள்ளி சம்பந்தம்பட்ட அணைத்து ஆவணங்களிலும் தமிழில்தான் கையெழுத்து போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மற்றும் ஒரு முயற்சியாக பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவச் செல்வங்களும் தங்களுடைய கையெழுத்தை தமிழில் போடுமாறு பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. மேலும் பள்ளி வருகை பதிவேடு போன்ற ஆவணங்களிலும் மாணவர்களின் பெயர்கள் தமிழில் எழுதப்பட வேண்டும், குறிப்பாக மாணவர்களின் இனிசியல்களும் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களுடைய கையெழுத்தை தமிழில் தான் போட வேண்டும் பள்ளி கல்வித்துறையில் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் இதில் ஏதும் நடைமுறை சிக்கல்கள் இருக்குமா என்ற கோணத்திலும் மக்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது.