FREQUENT CIBIL SCORE CHECKING WILL IMPACT MY SCORE?

அடிக்கடி சிபில் ஸ்கோர் பார்த்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?






இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கடன் பெறுவது என்பது மிகவும் சுலபமானதாக உள்ளது ஏனெனில் முன்பெல்லாம் ஒரு நபர் கடனுக்காக வங்கியை நாடும் பொழுது வங்கியானது அந்த குறிப்பிட்ட நபரின் கடந்த கால பண நடவடிக்கைகள் மற்றும் கடன் நடவடிக்கைகளை காண்பது அல்லது கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் இப்பொழுதெல்லாம் சிபில் ஸ்கோர் என்ற ஒரு முறை வந்த பிறகு இந்த நடவடிக்கைகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிதானதாக மாறிவிட்டது.


 இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் கண்டுபிடிக்க அவருடைய பான் அட்டை இருந்தால் மட்டும் போதுமானது. 
இந்தியாவில் CIBIL, EQUIFAX, EXPERIAN, HIGHMARK என நான்கு நிறுவனங்கள் இந்த கிரெடிட் ஸ்கோர் வசதியை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலும் CIBIL நிறுவனமே மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.



 இதன் அடிப்படையில் ஒருவருடைய சிபில் ஸ்கோரை அடிக்கடி பார்த்தால் அவர்களுடைய சிபில் ஸ்கோர் குறையும் என்ற செய்தி பரவலாக நம்பப்பட்டு வருகிறது ஆனால் அது உண்மை இல்லை.

 ஏனெனில் கிரெடிட் ஸ்கோர் தேடும் வசதி இரண்டு வகைப்படும் ஒன்று ஒரு நபர் அவருக்காகவே தேடுவது (SOFT SEARCH), இன்னொன்று ஒரு நபருக்காக அவர் கடனுக்காக விண்ணப்பித்த நிறுவனமோ அல்லது வங்கியோ தேடுவது (HARD SEARCH) என இரண்டு வகைப்படும்.

 இப்பொழுது ஒரு நபருக்காக அவராகவே தேடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் (SOFT SEARCH)அந்த முறையில் கிரெடிட் ஸ்கோர் தேடும்பொழுது அவருக்கு அவருடைய கிரெடிட் ஸ்கோரில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. ஆனால் ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் அவர் கடனுக்காக விண்ணப்பித்து அந்த குறிப்பிட்ட நிறுவனம் தேடும் பொழுது (HARD SEARCH) இவருடைய ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது.

 எடுத்துக்காட்டாக ஒரு நபர் குறிப்பிட்ட வங்கியில் ஒரு கடனுக்காக விண்ணப்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் விண்ணப்பிக்கும் பொழுது அனைத்து வங்கிகளும் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோரை கண்டிப்பாக தேடி அதன் அடிப்படையில் தான் கடன் வழங்கும்,  இப்பொழுது தேடப்பட்ட நபருக்கு கடன் வழங்குவதற்கான தகுதிகள் இல்லை என்றால் அவருடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் உடனே அவர் வேறு ஒரு வங்கிக்கு செல்வார் வேறொரு வங்கியிலும் இதே போன்று கிரெடிட் ஸ்கோர் தேடப்பட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும் இப்படி தொடர்ச்சியாக அவர் பல வங்கிகளில் விண்ணப்பம் செய்து அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவருடைய கிரிடிட் ஸ்கோர் கண்டிப்பாக குறையும்.

 எனவே உங்களுக்காக உங்களுடைய மொபைலில் அல்லது கணிப்பொறியில் நீங்களாவே உங்களுடைய பான் கார்டு எண் மற்றும் உங்களுடைய மொபைல் எண் கொடுத்து உங்களுடைய சிபில் ஸ்கோரை தேடும் பொழுது உங்களுக்கு எந்த விதமான பிரச்சனை ஏற்படப்போவதில்லை ஆனால் பிற வங்கிகளில் கடனுக்காக அடிக்கடி விண்ணப்பித்து கிரெடிட் ஸ்கோர் செக் பண்ணும் போது கிரெடிட் ஸ்கோர் கண்டிப்பாக குறையும் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

சிபில் ஸ்கோரானது 300 முதல் 900 வரை வகைப்படுத்தப்படுகிறது இதில் 750 க்கு மேல் இருந்தால் அவருடைய சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் உள்ளது என்று பொருள். அவருக்கு கடன்கள் எளிதாக கிடைக்கும். 750 கீழ் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பதில் சில சிரமங்கள் ஏற்படலாம்.

 
இந்த சிபில் ஸ்கோர்கள் அனைத்துமே ஏற்கனவே ஒருவர் கடன் வாங்கி அதை சரியான காலத்தில் திருப்பி செலுத்துவதன் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது, ஒரு வேளை ஒரு நபர் அவர் வாழ்நாளில் எந்தவிதமான கடனுமே எடுக்கவில்லை என்றால் அவருக்கு சிபில் ஸ்கோர் என்னவாக இருக்கும்? இந்த எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இதுவரை வாழ்நாளில் எந்தவிதமான கடனும் எடுக்காத ஒரு நபருக்கு அவருடைய சிபில் ஸ்கோர் -1 இல் இருக்கும் இவ்வாறான நபர்களுக்கும் சில வங்கிகள் அடமானம் இல்லாத கடன்கள் கொடுப்பதில் தயக்கம் காட்டுவது இயல்பு. ஏனெனில் அடமானம் வைத்து கடன் வாங்கும் பொழுது கடன் எடுத்த நபர் கட்டாத பட்சத்தில் அடமான பொருளை வங்கிகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அடமானம் இல்லாத கடன்களில் இந்த வசதி வங்கிகளுக்கு இல்லாது இருப்பதால் ஸ்கோர் -1 இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில வங்கிகள் கடன் கொடுப்பதில்லை.

நாம் வாங்கும் அனைத்து விதமான கடன்களுமே இந்த கிரெடிட் கம்பெனிகளுக்கு நாம் கடன் வாங்கும் நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவை கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக நகைக்கடன், வாகன கடன், வீட்டு உபயோகப் பொருள் கடன், வீடு கட்ட கடன், தனிநபர் கடன் போன்ற எந்த விதமான கடனாக இருந்தாலுமே அனைத்துமே கிரெடிட் ஸ்கோர் வழங்கும் கம்பெனிகளுக்கு நமது வங்கியின் மூலம் தெரியப்படுத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நாம் ஒருவருக்கு கேரண்டி கையெழுத்து போட்டாலும் அவருடைய லோனில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அந்த கடன் விவரங்களும் நம்முடைய கிரெடிட் ஸ்கோரில் பதிவு செய்யப்படும்,  அதாவது நம் நாம் கேரண்டி கையெழுத்து போட்ட நபர் அவருடைய கடனை சரியாக செலுத்தாத பட்சத்தில் நம்முடைய கிரெடிட் ஸ்கோர் குறையும் என்பது கவனத்தில் கொண்டு பிறருக்கு கேரண்டி கையெழுத்து போடுவது நல்லது...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS