WHAT IS CIBIL SCORE -1
WHAT IS CIBIL -1
பொதுவாக சிபில் ஸ்கோர் அதாவது கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். இது ஒரு நபர் ஏற்கனவே எடுத்த தன்னுடைய கடனுக்கான தவணையை சரியாக கட்டி வருவதை பொருத்து அதனுடைய ஸ்கோர் லெவல் 300-900 க்குள் இருக்கும்.
நாம் ஏற்கனவே அறிந்தது போல் ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் என்பது 750 க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக நல்லது 650 முதல் 750 வரை இருக்கும் நபர்களுக்கு லோன் கிடைப்பதில் சில தடங்கல்கள் வர வாய்ப்பு உள்ளது, 650 கீழ் உள்ள நபர்களுக்கு லோன் மிக எளிதில் கிடைப்பதில்லை. எனவே உங்களுடைய கடன் தவணைகளை அந்த தேதியில் சரியாக கட்டி வருவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக உங்களுடைய தவணை தேதி பிரதி மாதம் 5 என்று வைத்துக் கொள்வோம்.. நீங்கள் உங்களுடைய தவணைக்கான தொகையை ஐந்தாம் தேதிக்கு முன்னர் அதாவது நான்காம் தேதியே உங்களுடைய வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில் தவணைத் தொகை எடுக்கும் தானியங்கி முறையில் உங்களுக்கான தவணைத் தொகை எடுக்கும் நேரத்தை நாம் கணிக்க இயலாது. அது அதிகாலை 5 மணிக்கு கூட எடுக்கலாம் அல்லது அன்றைய தேதியில் இரவு 11 மணிக்கு கூட எடுக்கலாம் ஒருவேளை காலை ஐந்து மணிக்கோ... அல்லது ஆறு மணிக்கோ.... தவணைத் தொகை எடுத்தால் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் இல்லாமல் போகும்.... அதற்கு பின்பு அன்றைய தவணை தேதியிலேயே நீங்கள் உங்களுடைய வங்கியில் டெபாசிட் செய்தாலும் உங்களுக்கு பவுன்ஸ் கட்டணம் விதிக்கப்படும் மேலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையும்.
எனவே இஎம்ஐ தேதிக்கு முன்னரே உங்களுடைய வங்கி கணக்கில் பணத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மேற்கண்ட முறைகள் அனைத்தும் ஏற்கனவே ஒரு கடன் பெற்று அதனை தவணையாக கட்டி வருபவர்களுக்கு பொருந்தும். ஒரு வேளை ஒரு நபர் இதுவரை கடனே பெறவில்லை என்று வைத்துக் கொள்வோம்... அவருடைய கிரெடிட் ஸ்கோர் எந்த நிலையில் இருக்கும்???? ஆம் எந்த கடனுமே பெராத நபருக்கு கிரெடிட் ஸ்கோர் மைனஸ் ஒன் (-1)என்ற நிலையில் இருக்கும். ஏனெனில் அவருடைய திருப்பி செலுத்தும் திறனை பற்றி எந்த ஒரு நிறுவனத்திற்கோ வங்கிகளுக்கோ தெரியாது எனவே அவருக்கு மைனஸ் ஒன் என்ற நிலையில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நபர்கள் நபர்களுக்கு சில பொதுத்துறை வங்கிகளும் சில தனியார் வங்கிகளும் கடன் வழங்குவதில் முக்கியமாக அடமானம் இல்லாத கடன் வழங்குவதில் மிகவும் தயக்கம் காட்டுகின்றன.
அவர்களுக்கு எளிதில் கடன் கிடைப்பதில்லை ஆனால் ஒரு சில தனியார் வங்கிகளான hdfc வங்கி ஆக்சிஸ் வங்கி ஐ சி ஐ சி ஐ வங்கி போன்ற வங்கிகள் கடன் வழங்க முன் வந்துள்ளன. இந்த மைனஸ் ஒன் என்ற நிலையில் இருந்து நான் மாற வேண்டும் ஆனால் பெரிய அளவில் கடன் எடுக்க விரும்பவில்லை என்று நினைப்பவர்கள் சிறிய அளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது தங்க நகை கடன் போன்ற கடன்கள் எடுத்து அதனை கட்டி திருப்புவதன் மூலம் நீங்கள் கிரெடிட் ஸ்கோர் லெவலுக்கு வர முடியும் எனவே மைனஸ் ஒன்று(-1) இருந்தால் லோன் எடுக்க முடியாது என்ற பிம்பம் மக்களிடையே உலவி வருகிறது அதை நாம் பெரிதாக பொருட்படுத்த வேண்டியது இல்லை...