DOCUMENTS AFTER APPROVAL

லோன் அக்ரிமென்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் நம்முடைய லோன் அப்ரூவல் ஆன பின்பு உங்களிடம் அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்க வரும் பொழுது என்னென்ன விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். கடனுக்கான அக்ரீமெண்ட் என்பது ஒரு புத்தக வடிவில் இருக்கும். லோன் அப்ரூவல் ஆன உடனே உங்களிடம் அவசரம் அவசரமாக கையெழுத்து வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டால் நீங்கள் சில விஷயங்களை மட்டும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது அக்ரீமெண்ட் புத்தகத்தில் பிரிண்ட் செய்யப்படாமல் கையால் எழுதும் பகுதிகளை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் கையால் எழுதி இருந்தாலோ அல்லது எழுதாமலே இருந்தாலோ நீங்கள் அதனைப் பற்றி விரிவாக தெரிந்து, புரிந்து கொள்ளாமல் கையெழுத்து போடுவது பின்நாளில் உங்களுக்கு சில பண இழப்பை ஏற்படுத்த நேரிடலாம்.