DOCUMENTS AFTER APPROVAL
லோன் அக்ரிமென்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
நம்முடைய லோன் அப்ரூவல் ஆன பின்பு உங்களிடம் அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்க வரும் பொழுது என்னென்ன விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். கடனுக்கான அக்ரீமெண்ட் என்பது ஒரு புத்தக வடிவில் இருக்கும்.
லோன் அப்ரூவல் ஆன உடனே உங்களிடம் அவசரம் அவசரமாக கையெழுத்து வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டால் நீங்கள் சில விஷயங்களை மட்டும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது அக்ரீமெண்ட் புத்தகத்தில் பிரிண்ட் செய்யப்படாமல் கையால் எழுதும் பகுதிகளை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் கையால் எழுதி இருந்தாலோ அல்லது எழுதாமலே இருந்தாலோ நீங்கள் அதனைப் பற்றி விரிவாக தெரிந்து, புரிந்து கொள்ளாமல் கையெழுத்து போடுவது பின்நாளில் உங்களுக்கு சில பண இழப்பை ஏற்படுத்த நேரிடலாம்.
பிரிண்ட் செய்யப்பட்ட விஷயங்களை படிப்பதற்கு எச் டி எஃப் சி வங்கியின் இணையதளத்திலேயே நீங்கள் லோனுக்கான அக்ரீமெண்ட் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம் கூகுள் வலைத்தளத்தில் எச் டி எஃப் சி வங்கி பர்சனல் லோன் அக்ரிமெண்ட் என்று தேடினாலை முதலாவதாக பிடிஎஃப் வடிவில் உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அக்ரீமெண்ட் முதல் பக்கத்தின் மாதிரி படம் கீழே தரப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
லோனின் மிக முக்கியமான அக்ரீமெண்ட் பக்கம்
மேற்கண்ட இந்தப் பக்கத்தில் தான் உங்களுடைய லோனுக்கான மிக முக்கியமான தகவல்கள் கையால் நிரப்பப்படும். இந்தப் பக்கத்தில் லோன் எண், மொத்த லோன் தொகை, வட்டி விகிதம், லோன் இ எம் ஐ தொடங்கும் தேதி, லோன் முடியும் தேதி போன்ற முக்கியமான தகவல்களும் லோனை லோன் காலத்திற்கு முன்பாக மொத்தமாக கட்டி முடிப்பதாக இருந்தால் அதற்கு விதிக்கப்படும் தொகைக்கான சதவீத அளவுகளும் இருக்கும்.
இந்தப் பக்கத்தை உங்களுக்கு முன்பாகவோ அல்லது இந்தப் பக்கத்தை முழுவதுமாக நிரப்பிய பின்னரோ கையெழுத்து போடுவது உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் மேலும் இதில் s1 என்று இருக்கும் இடத்தில் லோன் எடுக்கும் முதல் நபரும் (APPLICANT), Co Borrower என்று இருக்கும் இடத்தில் லோன் எடுக்கும் இரண்டாம் நபரும் கையெழுத்து போட வேண்டும் அது தவிர்த்து வேறு இடங்களில் கையெழுத்து போடாமல் இருப்பது உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது
லோன் எடுக்கும் பொழுது உங்களிடம் ஒன்றோ அல்லது மூன்று காசோலைகள் பெறுவார்கள். அப்படி காசோலை வழங்கும் பொழுது அதற்கான விபரங்களை கீழே உள்ள அக்ரீமெண்ட் பக்கத்தில் நிரப்பி வாங்கிச் செல்ல அறிவுறுத்துங்கள். மேலும் காசோலையில் HDFC Bank limited account personal loan என்று எழுதிய பின்னரே லோன் அதிகாரியிடம் நீங்கள் காசோலையை வழங்க வேண்டும். மேலும் கீழ் காணும் இந்த பக்கத்தில் காசோலை பற்றிய விவரங்களை நிரப்பிய பின்னர் இந்தப் பக்கத்தில் கையெழுத்து போடுவது நல்லது.
நீங்கள் வழங்கும் மூன்று அல்லது ஒரு காசோலையில் முதலாவது காசோலை முதல் மாதத்திற்கான EMIக்காக பயன்படுத்தப்படும். மீதமுள்ள இரண்டு காசோலைகள் தேதி குறிப்பிடாமல் வங்கியில் பாதுகாக்கப்படும் (security cheque) நீங்கள் லோனை சரியான முறையில் கட்டி முடிக்கும் பொழுது அந்த காசோலைகள் உங்களிடமே திருப்பி வழங்கப்படும்.
அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்கும் சமயத்தில் அக்ரீமெண்ட் புத்தகத்தை தவிர மேலும் சில கூடுதல் பேப்பர்களிலும் கையெழுத்து போட வேண்டி இருக்கும். அவை லோன் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு உங்களுடைய அனுமதி கடிதம் லோன் பணத்தை ஆர் டி ஜி எஸ் முறையில் பணம் அனுப்ப தேவையான படிவம் லோனுக்கான இன்சூரன்ஸ் விண்ணப்ப படிவம் வேறு வங்கியில் உள்ள தனிநபர் கடனை எச்டிஎப்சி வங்கிக்கு மாற்றுவதற்கான கடிதம் போன்ற பேப்பர்களிலும் கீழே காணும் இ எம் ஐ எடுப்பதற்கான ( NACH) விண்ணப்ப படிவத்திலும் கையெழுத்து போட வேண்டும்
E Mandate முறை
நீங்கள் காசோலை வழங்குவதற்கு விரும்பவில்லை எனும் பட்சத்தில் இ மேன் டேட் முறை மூலம் உங்களுடைய இ எம் ஐ எடுக்கும் எடுப்பதற்கு அனுமதி வழங்கலாம் அதற்கு உங்களிடம் நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் கார்டு வசதி இருக்க வேண்டும் சில வங்கிகள் நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் கார்டு இரண்டையும் அனுமதிக்கின்றன சில வங்கிகள் நெட் பேங்கிங் முறை மட்டுமே அல்லது ஏடிஎம் முறை மட்டுமே அனுமதிக்கின்றனர் உங்களுடைய வங்கி இந்த ஈ மேண்டட் முறையில் உள்ளதா அப்படியே இருந்தால் எந்த முறையில் அனுமதி வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் என் பி சி ஐ இன் (NPCI - NATIONAL PAYMENT CORPORATION OF INDIA) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சென்று தெரிந்து கொள்ளலாம்
E Mandate முறையில் ஏதேனும் நன்மை இருக்கிறதா?
ஆம், கண்டிப்பாக இருக்கிறது ஏனென்றால் நாம் வங்கியில் போடும் கையெழுத்து பல வருடங்களுக்கு முன்பாக வங்கி கணக்கு துவங்கும் போது போட்ட கையெழுத்தாக இருக்கும். தற்பொழுது அதை புதுப்பித்து இருந்தால் பிரச்சனை இல்லை. புதுப்பிக்காமல் இருந்தால் லோன் இஎம்ஐ காக நீங்கள் செலுத்தும் படிவம் நிராகரிக்கப்படும், அவ்வாறு ஆகும் பட்சத்தில் உங்களுக்கான மாதத் தவணையை ஆட்டோமேட்டிக்காக எடுக்க முடியாமல் போகும் பொழுது உங்களுக்கு அபராத கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் E Mandate முறையில் இந்த பிரச்சனை எதுவும் இல்லாமல் ஆன்லைன் மூலமாக அப்ரூவல் கொடுப்பதால் பிற்காலத்தில் இ எம் ஐ செலுத்தும் முறையில் எந்தவித தடங்களும் ஏற்படாது.