இடுகைகள்

Agreement லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

JOINT LOAN or GUARANTOR LOAN PROOF

படம்
சிபில் ரிப்போர்ட்டில் உள்ள லோன் உங்களுடைய லோன் இல்லை அல்லது வேறு ஒரு நபரின் லோனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட லோன் என்று எவ்வாறு நிரூபிப்பது??? வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நாம் லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது நம்முடைய வருமானம் மற்றும் ஏற்கனவே எடுத்த கடன் மற்றும் அதற்கான தவணையை எவ்வாறு செலுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நமக்கான லோன் அப்ரூவல் செய்யப்படுகிறது.  இவ்வாறு பழைய கடன்களை பற்றி பார்க்கும் பொழுது நம் அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ரிப்போர்ட். சிபில் என்பது ஒரு கிரெடிட் ரிப்போர்ட் ஆகும் இந்தியாவில் சிபில் போன்று மேலும் 3 நிறுவனங்கள் உள்ளன. RBI ன் விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் இயங்கி வரும் கிரெடிட் நிறுவனங்கள் முறையே சிபில், ஈக்கு ஃபேக்ஸ், ஹைமார்க், எக்ஸ்பீரியன்  (   TransUnion CIBIL, Experian, Equifax, and CRIF Highmark)   போன்றவை ஆகும்.  பொதுவாக ஒரு நபர் கடனுக்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடன் பெற்றாலோ அனைத்து விவரங்களும் சிபில் ரிப்போர்ட் என்று நம்மால் பொதுவாக அழைக்கப்படும் அனைத்து கிரெடிட் நிறுவனங்களுக்கும் வங்கி மூலம் தெரியப்படுத்தப்பட...

DOCUMENTS AFTER APPROVAL

படம்
லோன் அக்ரிமென்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் நம்முடைய லோன் அப்ரூவல் ஆன பின்பு உங்களிடம் அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்க வரும் பொழுது என்னென்ன விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். கடனுக்கான அக்ரீமெண்ட் என்பது ஒரு புத்தக வடிவில் இருக்கும்.  லோன் அப்ரூவல் ஆன உடனே உங்களிடம் அவசரம் அவசரமாக கையெழுத்து வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டால் நீங்கள் சில விஷயங்களை மட்டும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது அக்ரீமெண்ட் புத்தகத்தில் பிரிண்ட் செய்யப்படாமல் கையால் எழுதும் பகுதிகளை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் கையால் எழுதி இருந்தாலோ அல்லது எழுதாமலே இருந்தாலோ நீங்கள் அதனைப் பற்றி விரிவாக தெரிந்து, புரிந்து கொள்ளாமல் கையெழுத்து போடுவது பின்நாளில் உங்களுக்கு சில பண இழப்பை ஏற்படுத்த நேரிடலாம்.