JOINT LOAN or GUARANTOR LOAN PROOF
சிபில் ரிப்போர்ட்டில் உள்ள லோன் உங்களுடைய லோன் இல்லை அல்லது வேறு ஒரு நபரின் லோனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட லோன் என்று எவ்வாறு நிரூபிப்பது???

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் நாம் லோனுக்காக விண்ணப்பிக்கும் பொழுது நம்முடைய வருமானம் மற்றும் ஏற்கனவே எடுத்த கடன் மற்றும் அதற்கான தவணையை எவ்வாறு செலுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நமக்கான லோன் அப்ரூவல் செய்யப்படுகிறது.
இவ்வாறு பழைய கடன்களை பற்றி பார்க்கும் பொழுது நம் அனைவருக்கும் நினைவில் வருவது சிபில் ரிப்போர்ட். சிபில் என்பது ஒரு கிரெடிட் ரிப்போர்ட் ஆகும் இந்தியாவில் சிபில் போன்று மேலும் 3 நிறுவனங்கள் உள்ளன. RBI ன் விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் இயங்கி வரும் கிரெடிட் நிறுவனங்கள் முறையே சிபில், ஈக்கு ஃபேக்ஸ், ஹைமார்க், எக்ஸ்பீரியன் ( TransUnion CIBIL, Experian, Equifax, and CRIF Highmark) போன்றவை ஆகும்.
பொதுவாக ஒரு நபர் கடனுக்கு விண்ணப்பித்தாலோ அல்லது கடன் பெற்றாலோ அனைத்து விவரங்களும் சிபில் ரிப்போர்ட் என்று நம்மால் பொதுவாக அழைக்கப்படும் அனைத்து கிரெடிட் நிறுவனங்களுக்கும் வங்கி மூலம் தெரியப்படுத்தப்பட்டு அவை கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்படும். அவ்வாறு பதிவு செய்யப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வழங்க வேண்டிய லோன் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. இப்பொழுது நீங்கள் ஏற்கனவே எடுத்த லோன் தவிர வேறு ஏதேனும் லோன் அதாவது தவறுதலாக உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இங்கு கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இதில் இன்னொரு வகை என்னவென்று பார்த்தோம் எனில் நம் உடன் பணிபுரிவருக்கோ நண்பருக்கோ அல்லதுஉறவினருக்கோ அவர்களுடைய லோனுக்காக கியாரண்டி கையெழுத்துப் போட்டிருந்தாலோ அல்லது அவருடன் சேர்ந்து லோன் எடுத்திருந்தாலும்
அந்த தகவலும் உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்படும்.
வீட்டு கடன் போன்ற கடன்களுக்கு பெரும்பாலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து லோன் எடுக்கும்படியாக கடன் வழங்குவது வழக்கமாக உள்ளது. இவ்வாறான வீட்டுக் கடன் போன்ற அடமான கடன்கள் நெடுங்காலத்திற்கு வழங்கப்படுவதால் ஒரு விண்ணப்பதாரர் மட்டுமல்லாது அவருடைய ரத்த சம்பந்தப்பட்ட இன்னொரு விண்ணப்பதாரரும் இணைக்கப்படுகிறார் எனவே இந்த ஒரு கடன் விவரம் இருவருடைய ரிப்போர்ட்டிலும் வரவு வைக்கப்படும்
மேலும் நீங்கள் உங்கள் உடன் பணி புரியும் நண்பருக்கோ இல்ல வேறு யாருக்கோ கடனுக்காக கியாரண்டி கையெழுத்து போட்டிருந்தாலும் உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் உங்கள் நண்பருடைய கடன் உங்களுடைய லோனாக கேரன்டர் ( GUARANTOR) என்ற பெயரில் பதிவு செய்யப்படும். இப்பொழுது நீங்கள் லோனுக்காக விண்ணப்பிக்க செல்லும் நிலையில் அந்த லோனுக்கான தவணைத் தொகையும் நீங்கள் கட்டி வருவதாகவே கருத்தில் கொள்ளப்படும்.
ஏனெனில் கேரண்டி கையெழுத்து என்பது லோன் எடுக்கும் நபர் தவணைத் தொகையை சரியாக கட்டாத பட்சத்தில் அதற்கு நான் பொறுப்பு என்று நாம் கையெழுத்து போடுவதாகவே கருதப்படுகிறது. எனவே ஒரு நபருக்கு கியாரண்டி கையெழுத்து போடும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.
இப்பொழுது அப்படி ஏதேனும் ஒரு கேரண்டி கையெழுத்து போட்ட லோன் கணக்கினால் நீங்கள் எடுக்கப் போகும் லோனிற்கான தொகைக்கான தகுதியில் மாற்றம் ஏற்படும் நிலமை வந்தால் அந்த லோன் என்னுடைய லோன் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியது நமது கடமை ஆகிறது.
மேலும் அந்த லோனில் நிலுவை தவணை ஏதும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது ஏதேனும் நிலுவை தொகையை இருந்தால் அதனை முழுமையாக கட்டி அந்தக் கடனில் ஏதேனும் நிலுவைத் தொகை இல்லை என்றும் அந்தக் கடன் வேறொருவர் கடன் என்றும் அதில் நீங்கள் கியாரண்டிக்காக கையெழுத்து போட்டு உளளீர்கள் அந்த கடனுக்கான மாததவணையை நீங்கள் கட்டவில்லை என்பதற்கான ஆவணங்களையும் வழங்க வேண்டியது அவசியம்.
பெரும்பாலும் கடன் வாங்கும் பொழுது கடனுக்கான அனுமதி கடிதம் ( LOAN SANCTION LETTER) வங்கியின் மூலம் வழங்கப்படும் அதில் கடன் எடுத்த தேதி கடன் தொகை கடன் விண்ணப்பதாரரின் பெயர் கேரண்டி கையெழுத்து போட்டவரின் பெயர் ஆகியவை அடங்கியிருக்கும் அந்த அனுமதி கடிதத்தை நீங்கள் சமர்ப்பித்து வங்கியில் இந்த கடன் உங்களுக்கானது அல்ல என்பதை நிரூபிக்க முடியும். ஒரு சில வங்கிகளில் இந்த அனுமதி கடன் முறையாக வழங்கப்படுவது இல்லை அப்படி வழங்கப்பட்டிருந்தாலும் உங்களிடம் கைவசம் இல்லாத பொழுது அதற்கான ஆவணமாக வங்கியிடமிருந்து சான்றிதழ் வாங்கி வழங்கலாம் அந்த சான்றிதழில் மேற்படி பார்த்த 1)லோன் எடுத்த தேதி 2)லோன் தொகை 3)லோன் எடுத்த நபரின் பெயர் 4)கேரண்டி கையெழுத்து போட்ட உங்களுடைய பெயர் ஆகிய நான்கு விஷயங்களை உள்ளடக்கி அந்த கடனில் எந்த நிலுவையும் தற்போதைய தேதி வரை இல்லை என்பது போல் சான்றிதழ் வாங்கி வழங்கினால் நீங்கள் எடுக்கப் போகும் லோனுக்கான தகுதி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
அவ்வாறான சான்றிதழ் வாங்குவதற்கு தேவையான ஒரு SAMPLE LATTER எடுத்துக்காட்டு சான்றிதழ் கீழே வழங்கப்பட்டுள்ளது அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து அதைப் போன்று நீங்கள் கையெழுத்துப் போட்ட வங்கியிடம் இருந்து சான்றிதழ் பெற்று நீங்கள் லோன் எடுக்கப் போகும் வங்கியிடம் வழங்க வேண்டியது அவசியமாகும்.
