WRONG LOAN DETAILS IN CIBIL REPORT (CREDIT REPORT)
சிபில் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் இருந்தால் எப்படி சரி செய்வது ???
இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் எந்த ஒரு லோனும் எடுக்க எந்த ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனங்களோ அனுமதிப்பதில்லை. நம்முடைய சிபில் ஸ்கோரின் அடிப்படையில் தான் நமக்கு வழங்கப்படும் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
உண்மையில் இது ஒரு கிரெடிட் ஸ்கோர் ஆகும். சிபில் என்பது ஒரு நிறுவனம் இதேபோன்று மேலும் மூன்று நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன அவை முறையே சிபில், எக்ஸ்பீரியன், ஈஃகுபாக்ஸ், ஹை மார்க் ஆகும்.
இதில் சிபில் நிறுவனமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.
சரி, இப்பொழுது நீங்கள் ஒரு லோனுக்காக விண்ணப்பம் செய்கிறீர்கள் அந்த வங்கியில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் சரி பார்க்கும் பொழுது அதில் ஏற்கனவே நீங்கள் எடுத்த ஒரு லோன் (பிரச்சினையில் இருப்பதாக காட்டப்படுகிறது) அதாவது லோனை சரியாக கட்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருப்பதாக அதில் காட்டுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே கடனுக்காக விண்ணப்பித்த வங்கி உங்களுடைய கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் உண்மையில் அது நீங்கள் எடுத்த லோன் இல்லை.. அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன செய்யலாம்? அதை தான் கீழே பார்க்க போகிறோம்.
இப்பொழுது நீங்கள் உங்களுடைய நண்பருக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ கடன் எடுப்பதற்காக கியாரண்டி கையெழுத்து போட்டிருந்தால் அந்த லோனும் உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் வரும். இது போன்ற சமயத்தில் இது உங்களுடைய லோன் இல்லை என்பதை நிரூபிக்க, இது நண்பருடையது அல்லது உறவினருடையது என்பதற்கான ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டி வரும். அதாவது நீங்கள் கையெழுத்து போட்ட லோனிற்கான சேங்சன் லெட்டர் அவருடைய வருமானச் சான்று- அவருடைய சம்பள பில் மற்றும் பேங்க் ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றை சமர்ப்பித்தால் பிரச்சனையில் உள்ள லோனை விட்டு விட்டு உங்களுக்கு கடன் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த லோனில் இன்று வரை உள்ள தவணையில் நிலுவை இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.
இல்லை நீங்கள் யாருக்கும் கையெழுத்து போடவில்லை!? உங்களுக்கு அந்த லோன் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை!! நீங்களும் அந்த லோனை எடுக்கவில்லை!! எனும் பட்சத்தில் என்ன செய்யலாம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நீங்கள் ஈமெயில் மூலம் விளக்கம் கேட்டு மெயில் அனுப்பலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு வங்கி உங்களுடைய விண்ணப்பத்தை நிராகரிக்கிறது என்றால் எந்த கிரெடிட் ரிப்போர்ட்டில் அந்த லோன் காண்பிக்கிறது என்பதை கேட்டு அறிந்து அது பற்றிய விபரங்களை அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அதாவது இந்தியாவில் செயல்படும் ஏற்கனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நிறுவனங்களில் எந்த நிறுவனம் உங்களுக்கான அறிக்கையை அளி
த்ததோ.. அந்த நிறுவனத்திற்கு நீங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை ஈமெயிலில் தொடர்பு கொண்டு அவர்களை கேட்கும்பொழுது அவர்கள் உங்களுக்கு சரியான ரிப்போர்ட்டை தருவார்கள்.
உங்களுடைய லோன் இது இல்லை என்று நிரூபிக்கப்படும் பொழுது சிபில் ரிப்போர்ட்டிலிருந்து அதாவது உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் இருந்து அந்த லோன் நீக்கம் செய்யப்படும். பின்பு அந்த ஈமெயிலில் நீங்க பெற்ற விபரங்களை எடுத்து நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்த வங்கியில் கொடுத்து உங்களுடைய நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்து லோன் எடுக்க இது வழிவகை செய்யும்.
இதை தவிர்த்து வேறு எந்த மூலமாகவோ நம்மால் அதை சரி செய்ய இயலாது ஏனெனில் நீங்கள் தொலைபேசியிலோ அல்லது வேறு மூலமாகவும் நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது அதற்கான ஆதாரங்களை நீங்கள் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.
ஈமெயில் மூலமாக நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது நீங்கள் எந்த தேதியில் இருந்து தொடர்பு கொண்டுள்ளீர்கள் அவர்கள் எந்த தேதியில் உங்களுக்கு பதில் அளித்துள்ளார்கள் போன்ற அனைத்தையும் நீங்கள் ஒரு ரிப்போர்ட்டாக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள முடியும். இது உங்களுக்கு இப்பொழுது எடுக்க வேண்டிய லோன் மட்டுமல்லாது இனிவரும் காலங்களிலும் உங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.
வாடிக்கையாளர் சேவை ஈமெயில் முகவரி:
(வாடிக்கையாளர் சேவை ஈமெயிலில் தொடர்பு கொண்டு 30 நாட்களுக்குள் உங்களுடைய கோரிக்கைக்கு உரிய விளக்கம் கிடைக்க வில்லை எனில் நோடல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும் )
EQUIFAX: ecsisupport@euifax.com
Equifax nodal officers: yashpal.deora @equifax.com
nikky.kenya@equifax.com
CIBIL: info@cibil.com
EXPERIAN: Consumer.Support@in.experian.com
nodal.officer.india@in.experian.com
HIGHMARK :crifcare@crifhighmark.com
customerservice@crifhighmark.com
nodalofficer@crifhighmark.com