DOCUMENTS FOR PERSONAL LOAN
REQUIRED DOCUMENTS FOR PERSONAL LOAN APPLICATION
பெர்சனல் லோனுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்பட போகிறது, வீட்டு லோனுக்கு வீட்டு பத்திரங்கள் வாகன கடனுக்கு வாகனத்தின் பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். ஆனால் பெர்சனல் லோனுக்கு என்ன ஆவணம் தேவைப்படும்? மற்ற லோன்களை காட்டிலும் தனிநபர் கடனுக்காக ஆவணங்கள் மிக மிக குறைவாகும்.
பெர்சனல் லோன் என்பது முழுக்க முழுக்க ஒரு நபரின் மாத வருமானம் எவ்வளவு? அவருடைய கையில் ( வங்கி கணக்கில்) எவ்வளவு கிடைக்கிறது? அவ்வாறு கிடைக்கும் பணத்தில் வேறு ஏதேனும் லோனுக்கு EMI கட்டி வருகிறாரா? என்பதை ( வேறு நபருக்கு அதாவது உங்கள் நண்பருக்கோ, அல்லது உறவினருக்கோ கியாரண்டி கையெழுத்து போட்டிருந்தால் அதனையும் கருத்தில் கொண்டு) பொருத்துதான் லோன் அப்ரூவல் ஆகும்.
எனவே உங்களுடைய அடையாள அட்டைகளின் நகல், வருமானத்திற்கான சான்றுகள் போன்றவை கண்டிப்பாக வழங்கவேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்..
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. முகவரி சான்று ( ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை )
3. பான் கார்டு நகல்
4. பணிபுரியும் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை நகல் ( Employee ID card copy)
5. கடைசி 3 மாத சம்பள சான்று (Payslip or Pay certificate)
6. கடைசி 6 மாத வங்கி பரிவர்த்தனை அறிக்கை ( Last 6 month bank statement of salary account) இன்றைய தேதி வரை.
7. FORM 16 அல்லது TAN NUMBER ( IFHRMS PAYSLIP இல்லாதவர்களுக்கு மட்டும்)
8. தற்போது தவணை ஏதேனும் கட்டி வந்தால் அந்த கடனுக்கான விவரங்கள்
என்னுடைய மற்ற கடன்களின் விபரக்குறிப்பு அவசியமா??
ஆம்! மற்ற கடன்களின் விபரக்குறிப்பு கண்டிப்பாக அவசியம். ஏனென்றால் ஒரு நபரின் மாத வருமானம் எவ்வளவு அதில் எவ்வளவு அவரால் கடன் கட்ட முடியும் என்ற கணக்கின் அடிப்படையில் மட்டுமே உங்கள் கடன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும்.
மேலும் நீங்கள் வேறு யாருக்காவது அதாவது உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ கியாரண்டி கையெழுத்து போட்டிருந்தால் அதற்கான விவரங்கள் அவசியம் தெரியப்படுத்த வேண்டும்.
கியாரண்டி கையெழுத்து போட்டிருந்தால் என்ன ஆகும்??
எடுத்துக்காட்டாக ராமர் என்பவர் மகேஷ் என்பவருக்கு கியாரண்டி கையெழுத்து போட்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். சில மாதங்கள் கழித்து ராமர் லோனுக்காக ஒரு வங்கியில் விண்ணப்பிக்கும் நிலை வந்தால் அந்த சமயத்தில் லோன் வழங்கும் வங்கி, மகேஷின் கடனையும் ராமரின் கணக்கில் கணக்கீடு செய்தே லோனை அப்ரூவல் செய்யும் இதனால் ராமருக்கு கிடைக்க வேண்டிய லோன் தொகை குறைய வாய்ப்புள்ளது. மேலும் ஒரு வேளை சில காரணங்களால் மகேஷால் அவருடைய மாத தவணையை சரியாக கட்ட முடியாமல் போனால் ராமரின் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஏனென்றால் கியாரண்டி கையெழுத்து போட்ட லோன் சரியான நேரத்தில் தவணை கட்டாமல் போகும் பொழுது, கியாரண்டி கையெழுத்து போட்ட உங்களுடைய சிபில் ஸ்கோர் என பொதுவாக அழைக்கப்படும் கிரெடிட் ஸ்கோர் குறையும். எனவே கியாரண்டி கையெழுத்து போடும் பொழுது கவனமாக ஆராய்ந்து பார்த்து போடுவது நல்லது அப்படி இல்லை என்றால் கேரண்டி கையெழுத்து போடாமல் இருப்பது மிகவும் நலம்.
எனவே இவ்வாறு கேரண்டி கையெழுத்து போட்டிருக்கும் பட்சத்தில் அந்த லோனுக்கான ஷேங்ஷன் லெட்டரோ அல்லது லோனுக்கான பேங்க் ஸ்டேட்மெண்ட்டோ நீங்கள் லோன் எடுக்கப் போகும் வங்கியிடம் வழங்க வேண்டியது அவசியம். மேலும் நீங்கள் யாருக்காக கியாரண்டி கையெழுத்து போட்டுள்ளீர்களோ அவருடைய வருமான சான்றையும் வழங்க வேண்டிய நிலை வரலாம் இது மூன்றாம் நபருக்கோ? அல்லது கணவன் மனைவிக்கு போட்டிருந்தாலோ? கூட (எடுத்துக்காட்டாக வீட்டுக் கடன் வாங்கும் சமயத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கடன் வாங்கும் நிலை உள்ளது எனவே அவ்வாறு வாங்கினாலும்) அதற்குரிய சரியான ஆவணங்களை வழங்க வேண்டும்.
கியாரண்டி கையெழுத்து அல்லது ஜாயின்ட் லோன் என்பதை நிரூபிக்க என்ன என்ன ஆவணங்கள் தேவை??
1.லோன் எடுத்த இருவரின் பெயர், 2.லோன் தொகை, 3.லோன் எடுத்த தேதி, 4.லோன் அக்கௌன்ட் நம்பர் மேற்கண்ட இந்த நான்கு விசயங்கள் ஒரு சேர இருக்கும் ஏதேனும் ஒரு ஆவணம் வழங்கினால் போதுமானது.
மேற்கண்ட நான்கு விசயங்கள் லோன் அப்ரூவல் லெட்டர் ( LOAN SANCTION LETTER ) , லோன் ஸ்டேட்மென்ட், லோன் பாஸ்புக், லோன் வட்டி சான்றிதழ் (Loan interest certificate) போன்றவற்றில் இருக்கும். மேற்கண்ட எதுவும் இல்லை என்றால் லோன் எடுத்த வங்கியில் இருந்து ஜாயின்ட் லோன் சான்றிதழ் மேற்கண்ட நான்கு விசயங்களை உள்ளடக்கி பெற்று தரலாம்.