HDFC BANK LOAN DIGITAL PASSBOOK / LOAN TRACKING IN APP
HDFC வங்கியின் லோனுக்கான டிஜிட்டல் பாஸ்புக் (லோன் விவரங்களை எந்த நேரத்திலும் தெரிந்துகொள்ள சுலபமான வழிமுறை)
பொதுவாக நாம் லோன் எடுக்கும் பொழுது லோனுக்கான தனி பாஸ் புக் வழங்குவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் லோனுக்கென தனி பாஸ் புக் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. இக்காலத்தில் மரங்களை காக்கும் (Avoid Paper to save tree) ஒரு முயற்சியாக அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் கவனம் செலுத்துகிறது. அதில் ஒரு பகுதியாக ஹெச்டிஎஃப்சி வங்கியின் டிஜிட்டல் பாஸ்புக் அப்ளிகேஷனை பற்றி விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம். ஹெச்டிஎஃப்சி வங்கியில் எடுத்த உங்களுடைய லோன் அனைத்தையும் ஒரே அப்ளிகேஷனில் நீங்கள் கண்காணிக்க முடியும்.
எச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் (சேவிங் அக்கவுண்ட்) இருப்பவர்களுக்கும், சேவிங் அக்கவுண்ட் எதுவுமே இல்லாமல் வெறுமனே லோன் மட்டும் எடுத்த வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த லோன் அப்ளிகேஷனை நீங்கள் ஆக்டிவேட் செய்யும் பொழுது ஹெச்டிஎஃப்சி வங்கியில் லோன் எடுக்கும் பொழுது எந்த மொபைல் நம்பர் கொடுத்தீர்களோ! அதே மொபைல் நம்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் வேறு நம்பரை பயன்படுத்தி நீங்கள் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் உங்களால் உங்களுடைய லோன் அக்கவுண்டை டிராக் செய்ய முடியாது.
இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய பர்சனல் லோன், கார் லோன்,இருசக்கர வாகன லோன் போன்ற அனைத்து விதமான லோன்களுக்கான விவரங்களையும் பெற முடியும்.
இதை எளிமையாக கூகுள் பிளே ஸ்டோரில் HDFC LOAN ASSIST என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
STEP 1
ப்ளே ஸ்டோரில் இன்ஸ்டால் செய்த பின்பு அப்ளிகேஷனை நீங்கள் ஓபன் செய்தால் முதல் பக்கம் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இருக்கும் இதில் நீங்கள் உங்களுடைய ஹெச்டிஎஃப்சி வங்கியில் அளித்த மொபைல் நம்பரை டைப் செய்து பின்பு கீழே உள்ள இரண்டாவது தேர்வு பட்டனை (✓) தேர்வு செய்யவும்.

STEP 2
இப்பொழுது கீழே உள்ளது போன்று பிரைவசி பாலிசிக்காக ( Privacy Policy) ஒரு பக்கம் ஓபன் ஆகும் இதை படித்து பார்த்து I AGREE என்பதை தேர்வு செய்யவும்
STEP 3
மேற்கண்டவாறு பிரைவசி பாலிசியை தேர்வு செய்த பின்னர் மீண்டும் பழைய பக்கத்திற்கு சென்று உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒருமுறை கடவுச்சொல் (OTP) அனுப்புவதற்கு அனுமதி கேட்கும். இப்பொழுது நீங்கள் அதில் வரும் மொபைல் நம்பர் உங்களுடையதுதானா? என சரி பார்த்து அனுமதி கொடுக்கவும்.
STEP 4
இப்பொழுது உங்களுக்கு வரும் OTPஐ உள்ளீடு செய்து ரிஜிஸ்டர் (REGISTER) பட்டனை அழுத்தவும்
STEP 5
OTP வெரிஃபிகேஷன் ஆன பின்பு கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்று ஒரு புதிய பக்கம் இருக்கும் இதில் நீங்கள் ஆறு இலக்க எண்ணில் (SIX DIGIT PASSWORD) ஒரு பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.
நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு வேறு மூன்றாம் நபர் எளிதில் யூகிக்க முடியாதவாறு இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக 111111, 123456 , 111222 என்று தொடர்ச்சியான எண்களைக் கொண்டு பாஸ்வேர்டை உருவாக்க கூடாது. மேலும் உங்களுடைய பிறந்த தேதியை கொண்டும் பாஸ்வேர்ட் உருவாக்கக் கூடாது.
இந்த ஆறு இலக்க பாஸ்வேர்டை குறித்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் மீண்டும் ஒவ்வொரு முறையும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் பொழுது இந்த பாஸ்வேர்டை கொண்டே அப்ளிகேஷனை திறக்க முடியும்.
STEP 6
ஆறு இலக்க பாஸ்வேர்டை உருவாக்கிய பின்னர் கீழே காட்டப்பட்டது போன்ற பக்கம் ஓபன் ஆகும். இதில் TRACK YOUR LOAN என்று இருக்கும் பகுதியை தேர்வு செய்யவும்
STEP 7
TRACK YOUR LOAN பகுதியை தேர்ந்தெடுத்த பின்னர் கீழ்கண்ட படத்தில் உள்ளது போல Track Loans and Applications என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும்.
ஒருவேளை இந்த STEP 7 உங்களுக்கு வரவில்லை என்றாலும் கவலை இல்லை நேரடியாக STEP 8 -விற்கு சென்று விடும்.
STEP 8
இங்கே நீங்கள் HDFC வங்கியில் எடுத்த அனைத்து லோன் கணக்குகளின் எண்களும் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையான லோனை தேர்வு செய்து அந்த லோனிற்கான விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஒருவேளை இந்த பக்கத்தில் உங்களுடைய லோன் எண் எதுவும் காண்பிக்கப்படவில்லை எனும் பட்சத்தில் நீங்களாகவே அதில் கொடுக்கப்பட்டிருக்கும் SEARCH ஆப்ஷனில் உங்களுடைய லோன் என்னை டைப் செய்து அந்த லோனுடைய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
STEP 9
இப்பொழுது பர்சனல் லோன் பற்றிய விபரங்களை காண விரும்புகிறீர்களா? பர்சனல் லோன் எண்ணை தேர்வு செய்தால் கீழ்க்கண்டவாறு ஒரு புதிய பக்கம் ஓபன் ஆகும். இந்தப் பக்கத்தில் மூன்று விதமான தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது
1. LOAN SUMMARY
2. TRANSACTION HISTORY
3. REPAYMENT SCHEDULE
இதில் முதலாவது உள்ள LOAN SUMMARY பகுதியில் உங்களுடைய லோனின் தற்போதைய நிலவரம் மிகச் சுருக்கமாக காண்பிக்கப்பட்டிருக்கும். அதாவது நீங்கள் எடுத்த மொத்த லோன் தொகை ( LOAN AMOUNT) லோனிற்கான கால அவகாசம் ( TENURE) வட்டி வீதம்(INTEREST RATE) இன்று வரை கட்டி உள்ள அசல் தொகை போன்றவை காண்பிக்கப்பட்டு இருக்கும்
STEP 9 (A)
TRANSACTION HISTORY பகுதியில் மாத மாதம் நீங்கள் கட்டிய (கடைசி 9 மாதத்திற்குரிய தவணை) தவணைகளின் நிலவரத்தை பார்த்துக் கொள்ளலாம்
STEP 9 (B)
REPAYMENT SCHEDULE பகுதியில் உங்களுடைய முதல் மாத தவணையில் இருந்து கடைசி மாத தவணை வரை மாத மாதம் நீங்கள் செலுத்தும் மாதாந்திர EMIல் எவ்வளவு அசல் தொகை (PRINCIPLE AMOUNT) கழிகிறது எவ்வளவு தொகை வட்டிக்கு (INTEREST) போகிறது என்பதை பார்க்கக் கூடிய அட்டவணை இங்கே கிடைக்கும்..
இந்த அப்ளிகேஷன் மூலமாக அனைத்து Loan விவரங்களையும் நாம் பார்த்து கொள்ளலாம் ஆனால் எந்த ஒரு விவரங்களையும் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்ய முடியாது.
மேற்கண்ட விவரங்களின் மூலம் உங்களுடைய அனைத்து எச்டிஎப்சி லோன்களுக்கான விவரங்களையும் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் உங்கள் மொபைலிலேயே லோனை சரி பார்த்துக் கொள்ள முடியும்
குறிப்பு: மேற்கூறிய வழிமுறைகளில் ஏதேனும் வழிமுறை புரியாமலோ? அல்லது தவறுதலாகவோ? இருந்தால், கீழே உங்களுடைய கருத்துக்களையும் உங்களுடைய இமெயில் ஐடியுடன் சேர்த்து கமெண்ட் செய்யவும் 48 மணி நேரத்தில் உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட பதில் கிடைக்கும்
வாழ்க வளமுடன்...