CHEQUE BOOK REQUEST SBI ( YONO )

Cheque book request without bank visit: STATE BANK OF INDIA -YONO (வங்கிக்கு செல்லாமல் செக் புக் வாங்குவது எப்படி? எஸ் பி ஐ )

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வங்கி சேவைகளும் டிஜிட்டல் முறையில் கிடைப்பதால் நம்மில் பெரும்பாலானோர் வங்கிகளுக்கு நேரில் செல்வதே இல்லை. ஏடிஎம் கார்டு, கூகுள் பே, போன் பே போன்ற சேவைகள் பயன்பாட்டுக்கு வந்தபின் அனைத்து வங்கி வேலைகளையும் ஒரே நேரத்தில் நமது வீட்டில் இருந்தபடியே முடித்து விடுகிறோம். அந்த வகையில் SBI வங்கியில் காசோலையை எப்படி வீட்டில் இருந்தே விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.



ஸ்டேட் பாங்க் வங்கியில் YONO அப்ளிகேஷன் வைத்திருப்பவர்கள், உங்களுடைய யோனோ அப்ளிகேஷனை லாகின் செய்யவும். லாகின் செய்தவுடன் முதல் பக்கத்தின் கடைசியில் கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்று சர்வீஸ் ரெக்யூஸ்ட் என்ற ஆப்ஷன் இருக்கும் அதை செலக்ட் செய்யவும்









சர்வீஸ் ரிக்வெஸ்ட் ஆப்ஷனை செலக்ட் செய்த பின்னர் உங்களுக்கு கீழே காண்பிக்கப்பட்டுள்ளது போன்ற பக்கம் கிடைக்கும் அதில்  cheques என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்









STEP 1

இங்கே திறக்கும் புதிய பக்கத்தில் Request cheque book என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது எத்தனை காசோலைகள் உடன் கூடிய செக் புக் தேவை என்று தேர்வு செய்யவும்.


பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Terms and conditions தேர்வு செய்து நெக்ஸ்ட் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.



STEP 2
இப்பொழுது அடுத்த பக்கத்தில் காசோலை புத்தகத்தை அனுப்புவதற்கான முகவரிக்கான தேர்வுகள் காண்பிக்கப்படும். அதில் நீங்கள் ஏற்கனவே வங்கியில் கொடுத்த முகவரிக்கோ, அல்லது நீங்கள் தற்போது வசித்து வரும் முகவரிக்கோ? எது தேவையோ? அதை தேர்வு செய்து CONFIRM கொடுக்கவும்


இப்பொழுது உங்களுக்கான காசோலை புத்தகத்திற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றிலிருந்து நான்கு தினங்களுக்குள் நீங்கள் தேர்வு செய்த முகவரிக்கு காசோலை புத்தகம் அனுப்பி வைக்கப்படும். மேலும் காசோலை புத்தகம் அனுப்பி வைக்கப்படும் பொழுது அதனை ட்ராக் செய்யும் விதமாக Tracking ID யும் உங்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும்.


மேற்கண்ட வழிமுறைகளுக்கான பட விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.






STEP 1








STEP 2






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IFHRMS - payslip download online & Password reset

IMPORTANT LINKS