PERSONAL LOAN

பர்சனல் லோன் FULL  DETAILS EXPLAIN
இன்றைய காலகட்டத்தில் வங்கியில் கடன் வாங்குவது என்பது மிகவும் சுலபமான ஒரு விஷயமாக உள்ளது. வங்கி மூலம் பெறப்படும் கடன்களை இரு வகைகளாக பிரிக்கலாம் ஒன்று அடமானம் இல்லாத கடன் மற்றொன்று அடமானக் கடன்.

 அடமான கடன் என்பது நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு இணையாகவோ அல்லது கடன் தொகையை காட்டிலும் அதிக மதிப்புடைய சொத்தை அடமானமாக கொடுத்து வாங்குவதாகும். இதில் தனிநபர் கடன் என்பது அடமானம் இல்லாத கடன் வகையைச் சார்ந்தது. தனிநபர் கடனுக்கு எந்தவிதமான அடமான பத்திரங்களும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. மேலும் நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு மூன்றாம் நபர் அதாவது உங்கள் உறவினரோ! அல்லது உடன் பணி புரியும் நண்பரோ! எவரும் உத்திரவாத கையெழுத்து போட வேண்டியது இல்லை.

தனிநபர் கடன் வழங்குவதற்கான வங்கியின் செயலாக்க கால அளவு ( LOAN PROCESSING TIME) மிக மிக குறைவான கால அளவாகும், விண்ணப்பித்த ஒரு சில நாட்களிலேயே கடன் தொகை உங்களுடைய வங்கி கணக்கில் கிடைக்கும். எனவே பெரும்பான்மையான மக்களின் விருப்பத் தேர்வாக தனிநபர் கடன் இருக்கிறது. மேலும் தனி நபர் கடன் மூலம் பெற்ற பணத்தை கொண்டு எதற்காக செலவு செய்யப் போகிறோம் என்பதை வங்கியிடம் ஆதாரபூர்வமாக தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை.  கீழ்க்காணும் எந்த ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

PURPOSE OF PERSONAL LOAN CAN BE ANY ONE OF BELOW
  •         Education,
  •         Travel Abroad, 
  •         Home Renovation,
  •         Marriage etc.,
---------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------





ஏன் பர்சனல் லோன் எடுக்க வேண்டும்??? (சிறப்பம்சங்கள் என்ன?)


1. அதிகபட்சமாக 40 லட்சம் வரை அடமானம் இல்லாமல் உடனடி கடன் வசதி.

2. எந்தவிதமான கேரண்டி கையெழுத்தும் தேவையில்லை.

3. மிக மிகக் குறைந்த வட்டியில் அதிகபட்சமாக 72 மாதங்கள் வரை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம்.

 4. வங்கிக்கு நேரில் வந்து காத்திருக்க தேவையில்லை. பர்சனல் லோனுக்கான அனைத்து செயல்முறைகளும் உங்கள் இடத்திலேயே வந்து செய்து தரப்படும்.

5. தற்சமயம் ஏதேனும் வங்கிகயிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ பர்சனல் லோன் இருந்தால் அதனை குறைந்த வட்டிக்கு மாற்றி அதிகமான தொகை பெற்றுக் கொள்ளலாம்.

தனிநபர் கடனுக்கு தேவையான ஆவணங்கள் (PERSONAL LOAN REQUIREMENTS)

1. Minimum Net Salary : 25000/- Per month ( வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் சம்பள பணம் ₹25000/- க்கு அதிகமாக இருக்க வேண்டும்) 
2. Photo 1 
3. Address Proof ( Adhaar copy, Driving Licence, Passport, Voters ID etc.,)
4. ID Proof ( Adhaar card, Driving Licence, Passport, Voters ID etc.,)
5. Employee ID card copy
6. Offer Letter copy (Only for Pvt company employees)
7. Latest 3 month payslip/ pay certificate (Online , IFHRMS or Letter head payslip)
8. Last 3-6 month bank statement till today ( நீங்கள் விண்ணப்பிக்கும் அன்றைய தேதி வரை இருப்பது நலம்)
9. Personal loan statement ( if any active loans - தற்போது ஏதேனும் தனிநபர் கடனுக்காக தவணை கட்டி வரும்பட்சத்தில் அதனுடைய ஸ்டேட்மெண்ட்)

குறிப்பு

நீங்கள் வேறு எவருக்காவது ஏதேனும் கடனுக்காக உத்திரவாத கையெழுத்து (Guarantor signature) போட்டிருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் கடனுக்கான இணை விண்ணப்பதாரராக (Co-Applicant) இருந்தாலோ தெரியப்படுத்த வேண்டும் 






மேலும் விளக்கங்கள் ஆலோசனைகள் தேவையெனில் தயங்காமல் அழையுங்கள் 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS