Can I avail a another loan after settlement
ஒரு லோன் எடுத்து செட்டில்மெண்ட் செய்த பிறகு வேறொரு லோன் எடுக்க முடியுமா?
பொதுவாக ஒரு லோன் செட்டில்மெண்ட் ஆகிறது எனில் அந்த லோன் எடுத்த நபரால் அந்த லோனை சரியாக கட்ட முடியாத காரணத்தினால் மட்டுமே அந்த லோன் செட்டில்மெண்ட் என்கிற நிலைக்கு போகும். மேலும் செட்டில்மெண்ட் செய்தால் சிபில் ஸ்கோர் வெகுவாக குறையும்.
செட்டில்மெண்ட் என்பது ஒரு லோன் எடுத்து தவணை சரியாக கட்டாத பட்சத்தில் அதற்கான தவணைத் தொகை, கட்ட தவறிய தவணைக்கான அபராத தொகை அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய தொகையாக வரும் பொழுது அந்த லோனை கட்டி முடிப்பதற்கு வேறு வழிகள் இல்லாத பட்சத்தில், மொத்த தொகையை கட்டாமல் கடன் கொடுத்த வங்கிக்கும் நஷ்டம் ஏற்படாமல் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி முடிக்கும் வழிமுறைதான் செட்டில்மெண்ட் என்பதாகும்.
அதனால் ஒரு லோன் எடுத்து நீங்க செட்டில்மெண்ட் பண்ணி விட்டீர்கள் எனில் மற்ற வங்கிகள் உங்களுக்கு எளிதில் அடுத்த லோன் கொடுப்பது இல்லை.
எடுத்துக்காட்டாக கல்வி கடன் பெரும்பாலும் சரியாக கட்டப்படுவதில்லை ஆனால் நீங்கள் ஏற்கனவே எடுத்த மற்ற அனைத்து லோன்களும் (HOME LOAN, CAR LOAN etc ) சரியான முறையில் கட்டி வரும் பட்சத்தில் சரியாக கட்டி வந்த லோன்களை மேற்கோள் காட்டி புதிய கடன் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் உங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு நீங்கள் கியாரண்டி கையெழுத்து போட்டு, அந்த நபர் செட்டில்மெண்ட் செய்தாலும் உங்களுக்கு லோன் கிடைப்பது இல்லை. இந்த சமயத்தில் இந்த குறிப்பிட்ட நபருடைய வருமானச் சான்றுகள் (Payslip, Account statement) மற்றும் நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த லோனுக்கான (Sanction letter) போன்றவற்றை சமர்ப்பித்து அந்த லோன் உங்களுடையது அல்ல, நீங்கள் கியாரண்டி கையெழுத்து போட்ட லோன் தான் என்பதை நிரூபித்து லோன் எடுக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் மேற்கண்ட முறையில் லோன் எடுப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனவே முடிந்த அளவு நீங்கள் எடுத்த லோனாக இருந்தாலும் சரி , அல்லது நீங்கள் கியாரண்டி கையெழுத்து போட்ட லோனாக இருந்தாலும் சரி செட்டில்மெண்ட் நிலைக்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்வது உங்களுக்கு நலம் பயக்கும்.
ஒருவேளை உங்களுடைய லோன் செட்டில்மெண்ட் நிலைக்கு சென்று விட்டது... செட்டில்மெண்ட் செய்து முடித்த பிறகு நீங்கள் எங்கேயும் லோனுக்காக அப்ளை செய்யும் பொழுது உங்களுடைய லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய சிபில் ஸ்கோரை கூட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். சிபில் ஸ்கோரை கூட்டுவதற்கு முதலில் நீங்கள் உங்களுக்கு ஏற்கனவே கிரெடிட் கார்டு இருந்தால் அதனுடைய தவணையை சரியாக கட்டுவதன் மூலம் கூட்டலாம். அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் TV, FRIDGE, AC, WASHING MACHINE... போன்ற கடன்கள் வழங்கும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று அந்த கடன்களை அதனுடைய தவணை நேரத்தில் கட்டி உங்களுடைய சிபில் ஸ்கோரை கூட்டலாம் இவ்வாறு ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் சிறு சிறு லோன்களாக எடுத்து பின்னர் அதிலிருந்து ஒரு படி மேலாக டூவீலர் லோன் எடுப்பது போன்று உங்களுடைய லோனின் அளவை கூட்டி அதிக தொகை லோன் எடுக்க முடியும். எடுத்துக்காட்டாக வீட்டுக் கடன் தனிநபர் கடன் போன்ற தொகை அதிகம் உள்ள லோன் எடுக்கும் பொழுது உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம் எனவே ஒரு முறை உங்களுடைய லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் பின்பு தொடர்ந்து வேறு இடங்களில் அப்ளை செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அடிக்கடி சிபில் ஸ்கோர் செக் செய்யப்பட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பொழுது உங்களுடைய சிபில் ஸ்கோர் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.