Doctor Loan without ITR

DOCTOR LOAN WITHOUT ITR DOCUMENTS




இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனமான hdfc வங்கியின் தனிநபர் கடன் இப்பொழுது மருத்துவர்களுக்கான அடமானம் இல்லா கடன் தொகை அதிகபட்சமாக 25 லட்சம் வரை வருமான வரி கணக்கு அறிக்கை இல்லாமல் வழங்கப்படுகிறது.

 பொதுவாக மருத்துவர்களுக்கு அடமானம் இல்லாத தனிநபர் கடன் அதிகபட்சமாக 75 லட்சம் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த 25 லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு வருமான வரி தாக்கல் அறிக்கை தேவையில்லை என்று அறியப்படுகிறது. 

Income tax தாக்கல் செய்யாத மருத்துவர்கள் அவர்களுடைய கல்வி தகுதியின் அடிப்படையில் கடன் பெற்றுக் கொள்ள முடியும். அவருடைய மருத்துவ சேவை ( Own clinic/ Hospital) விரிவாக்கத்திற்கு உதவிகரமாக இந்த சலுகை உள்ளது. பட்டப்படிப்பு முடித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன, மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யப்பட்ட தகுதிகளை கொண்ட மருத்துவர்கள் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.


 HDFC வங்கியின் இந்த சலுகையில் கடன் பெற விரும்பும் மருத்துவர்கள் தனியார் அல்லது அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவராக இருக்கலாம் அல்லது சொந்த கிளினிக் நடத்தி வரலாம். தகுதியான அனைவருக்கும் கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 மேலும் இந்த வசதியை கொண்டு கடன் பெறுவதற்கு மருத்துவருடைய பேங்க் ஸ்டேட்மென்ட் அதாவது கடைசி ஆறு மாதத்திற்கு உள்ளான ஸ்டேட்மென்ட் பிடிஎஃப் வடிவில் வழங்கப்பட வேண்டும் உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்டில் உள்ள  மாதாந்திர அறிக்கையை பொறுத்து உங்களுடைய கடன் தொகை அளவு நிர்ணயிக்கப்படும்.

மேலும் 10 லட்சத்திற்கு மேல் எடுக்கும் லோன்களுக்கு 12 தவணைக்கு பிறகு வட்டி மற்றும் அபராத கட்டணம்  இல்லாமல் ( NIL FORECLOSURE CHARGES) கடனை மொத்தமாக கட்டி முடிக்கும் வசதி உள்ளது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS