Why E-MANDATE (E NACH) Amount is Higher than Loan EMI




ஏதேனும் ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து கடன் அப்ரூவல் ஆன பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் லோன் பணத்தை வரவு வைப்பதற்கு முன்பாக... உங்களிடமிருந்து மாத தவணை தானியங்கி மூலம் பெறுவதற்காக வங்கி காசோலை அல்லது ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்வதற்கு E Mandate என்னும் வழிமுறையில் உங்களுடைய அனுமதி வழங்க வேண்டும்.


மாதத் தவணையை உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் எடுப்பதற்கு காசோலை வழங்கும் பட்சத்தில் சில நேரங்களில் கையெழுத்து வித்தியாசம் போன்ற சில காரணங்களினால் மாத தவணை தானியங்கி முறையில் எடுப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 இதனை தவிர்க்கவே பெரும்பான்மையான வங்கிகள் தற்பொழுது ஆன்லைன் முறையில் அனுமதி வழங்க விரும்புகின்றனர். இது E Mandate என்னும் வழிமுறையை பின்பற்றி உங்களுடைய டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது ஆதார் கார்டு கொண்டு மாத தவணை எடுக்க ரெஜிஸ்டர் செய்ய முடியும். அவ்வாறு ஆன்லைன் முறையில் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது பிற்காலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நம்முடைய வங்கிக் கணக்கில் இஎம்ஐ அமௌன்ட் எடுக்காமல் போவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. 



இவ்வாறு E Mandate முறையில் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது, ரிஜிஸ்டர் செய்யும் இ எம் ஐ தொகையானது உங்கள் கடனுக்கான இஎம்ஐ தொகையை காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும். இதனைக் கண்டு வாடிக்கையாளர் பயப்படத் தேவையில்லை. 

 தானியங்கி முறையில் ஒரு கடனுக்கு ஒரு முறை மட்டும் தான் E Mandate ரெஜிஸ்டர் செய்து அனுமதி பெற முடியும்.  ஏனெனில் உங்களுடைய மாதத் தவணை பிற்காலத்தில் ஏதேனும் தவறும் பட்சத்தில் ( EMI BOUNCE )அதற்கான அபராத தொகையும் சேர்த்து வசூலிப்பதற்கு ஏதுவாக உங்களுடைய கடனுக்கான மாத தவணையில் 1.5%  முதல் இரண்டு சதவீதம் வரை கூடுதலாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.  நம்முடைய மாதத் தவணை தவறாமல் கட்டும் பட்சத்தில் நமக்கு எவ்வித இழப்புகளும் ஏற்படாது. எனவே இது ஒரு லோனுக்கான அதிக பட்ச ஆதார தவணையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர இது உண்மையான தவணை தொகை இல்லை.

 எடுத்துக்காட்டாக உங்களுடைய லோனுக்கான மாத தவணை பத்தாயிரம் ரூபாய் என்று உங்களிடம் வங்கியில் கூறினாலும் நீங்கள் E Mandate முறையில் ரிஜிஸ்டர் செய்யும் பொழுது அதிகபட்சமாக 12000 ரூபாய்க்கு ரிஜிஸ்டர் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மாத தவணையாக 10,000 மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.  இதனால் E Mandate செய்யும் பொழுது கூடுதலான தொகை இருந்தால் அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. உங்களுடைய லோன் அக்ரிமெண்டில் குறிப்பிட்டுள்ள மாத தவணை மட்டுமே வசூலிக்கப்படும்.. 





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IFHRMS - payslip download online & Password reset

IOB STATEMENT DOWNLOAD WITHOUT NETBANKING & MOBILE BANKING

IMPORTANT LINKS