பர்சனல் லோன் மற்றும் இஎம்ஐ போன்ற விஷயங்களை தவிர்க்காமல் ஒருவர் இன்றைய காலகட்டத்தில் வாழ்வது என்பது மிக அரிதான ஒரு விஷயமாக காணப்படுகிறது, காரணம் ஒரு பர்சனல் லோன் பெறுவதற்கு ஒரு நபர் இன்று எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. எண்ணற்ற கணக்கில் அடங்கா பர்சனல் லோன் வழங்கும் மொபைல் செயலிகள் இன்று அதிகம் அதிகமாய் உள்ளன. ஒரு நபருக்கு பர்சனல் லோன் தேவைப்பட்டால் மிகக் குறுகிய நேரத்தில் ஐந்து முதல் பத்து வினாடிகளில் பர்சனல் லோன் பெறுவதற்கான வசதிகள் இன்று வந்துவிட்டன. அதனால் இந்த வசதிகள் ஒரு வரப் பிரசாதம் போல் தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் இது ஒரு சாபமாகவே கருதப்படுகிறது. காரணம் மிக எளிதாக லோன் பெற வசதி இருப்பதால் எவர் ஒருவரும் உடனடியாக லோன் பெற முடி முடிகிறது அதனால் அவர்களுடைய மாதாந்திர இஎம்ஐ செலுத்தும் சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்று நம் அன்றாட ம் தேவைக்கு பயன்படுத்தும் செயலிகளான அனைத்து செயலிகளும் பர்சனல் லோன் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக
flipkart amazon போன்ற செயலிகள் போன் பே, கூகுள் பே போன்ற செயலிகளை இன்று நாம் அன்றாடம் பரிவர்த்தனைகளுக்காகவும் பொருள்கள் வாங்குவதற்காகவும் நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்ற செயலிகள் அவ்வப்போது நமக்கு பர்சனல் லோன் எலிஜிபிலிட்டியை தெரியப்படுத்திக் கொண்டே இருப்பதால் நாம் அவற்றின் மூலம் சுலபமாக பெர்சனல் லோன் வாங்கிக் கொள்கிறோம். இவை தவிர்த்து பல அதிகமான பர்சனல் லோன் வழங்கும் செயலிகள் இன்று காணப்படுகிறது சாதாரணமாக ஒரு நபர் தன்னுடைய ஆதார் மற்றும் பேன் அட்டையை பயன்படுத்தி உடனடியாக பர்சனல் லோன் 5000 முதல் 10 லட்சம் வரை எந்தவித அடமானமும் இல்லாமல் வாங்க முடிகிறது.
இவ்வாறு வாங்குவதால் ஏற்படும் சிக்கல்களில் ஒன்று மாதாந்திர இஎம்ஐ. பெரும்பாலும் வங்கிகளை காட்டிலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (
NBFC ) மூலம் பெறப்படும் பர்சனல் லோன்களுக்கு வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. அவசர காலத்தில் உடனடியாக நமக்கு பணம் கிடைப்பதால் நம்முடைய முக்கிய தீர்வாக இது போன்ற ஆன்லைன் லோன்களை நம்மை அறியாமல் அதிக வட்டி தொகைக்கு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இவ்வாறு இரண்டு, மூன்று லோன் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு இருப்பதால் மாதாந்திர தவணை நம்முடைய வருமானத்திற்கு இணையாக வந்துவிடுகிறது. எனவே மாத வருமானத்தில் ஈஎம்ஐ தொகை கட்டிய பிறகு நமது அன்றாட தேவைகளுக்கான பணம் இல்லாமல் பரிதவிக்கும் நிலை இன்று பரவலாக மக்களிடையே காணப்படுகிறது. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் தவிர்த்துக் கொள்ள பேலன்ஸ் டிரான்ஸ்பர் அல்லது லோன் டேக்ஓவர் ( Balance Transfer) முறை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் எனப்படுவது ஏற்கனவே இருக்கும் பல லோன்களின் இ எம் ஐ குறைத்து ஒரே ஈ எம் ஐயாக குறைந்த மாதத் தவணையில் சற்று கூடுதலான தவணை காலத்திற்கு மாற்றி கொள்வதாகும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு மூன்று பர்சனல் லோன் இருப்பதாக வைத்துக் கொள்வோம் அவற்றின் மாத தவணைகள் முறையை 10 ஆயிரம் 12 ஆயிரம் 14 ஆயிரம் எனவே 3 லோன்களின் மொத்த மாதாந்திர இஎம்ஐ 36 ஆயிரம் ரூபாய். இப்பொழுது இவற்றின் கடன் அசல் நிலுவைத் தொகை ( Loan Principal Outstanding ) ஏழு லட்சம் என்று வைத்துக் கொள்வோம் இப்பொழுது மாதம் 36,000 கட்டி வரும் இந்த மூன்று லோன்களையும் ஒரே லோனாக மாற்றி குறைந்த மாதத் தவணையை பெற முடியும். அது மட்டும் இல்லாமல் கூடுதலாகவும் தொகை தேவைப்படும் பட்சத்தில் பழைய 3 லோன்களின் அசல் தொகை ஏழு லட்சம் போக கையில் மூன்று லட்சம் தேவைப்படுகிறது. ஆக மொத்தம் 10 லட்சமாக ஒரு புதிய லோனை இந்த மூன்று லோன்களையும் ஒரு வங்கியின் மூலமே அடைத்து கையிலும் மூன்று லட்சம் பெரும் பொழுது, மொத்த பத்து லட்சத்திற்கான மாத தவணை ஒரு 22 ஆயிரத்திலிருந்து 23,000 க்குள் பெறுவதற்கான வாய்ப்புகள் இன்று இருக்கிறது. மேலும் தவணைக்காலம் ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரை இன்று கிடைக்கிறது.
எனவே 36 ஆயிரம் ரூபாய் கட்டி வந்த இடத்தில் 22,000 கட்டி மேலும் அதிகமாக நமக்கு தேவையான தொகையை பெறுவதற்கான வாய்ப்புகள் இன்று உள்ளன. இந்த முறையை பயன்படுத்தி மாதாந்திர கடன் சுமையை எளிமையாக குறைக்கலாம். இது போன்ற முறைகளில் நாம் ஏற்கனவே எடுத்து கட்டி வரும் லோன்களின் மாதத்தவனையை தவறவிடாமல் சரியான நேரத்தில் கட்டி வந்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும். ஒருவேளை கடந்த ஆறு மாதத்திற்குள் ஏதேனும் ஒரு சில தவணைகளை தவணை தேதியில் இருந்து சில நாட்கள் கழித்து கட்டியிருந்தால் அவை சிபில் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோர் அறிக்கைகளில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு வருவதால் அவை நமக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே உள்ள லோன்களின் இஎம்ஐ சரியாக கட்டி வரும் ஒரு நபர் இதுபோன்ற பேலன்ஸ் ட்ரான்ஸ்பர் முறையை பயன்படுத்தி மாதந்திர தவணை சுமையை எளிதாக குறைத்துக் கொள்ள முடியும்.
பேலன்ஸ் டிரான்ஸ்பர் முறையில் கடன் பெறுவது மற்றும் கடன் பெறத் தகுதி அதற்கான ஆவணங்கள், கால அளவு போன்றவற்றை பற்றியும் உங்களுடைய இன்றைய கடன் எலிஜிபிலிட்டி பற்றியும் எந்த வங்கியில் லோன் எடுத்தால் குறைந்த வட்டியில் உங்கள் வருமானத்திற்கு ஏற்ற லோன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இலவசமாக ஆலோசனை பெற அழைக்கவும் அந்தோணி ராஜ் - 9360283671 (பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் தமிழகம் முழுவதும்)
Frequently Asked Questions
1. What is a loan balance transfer?
A loan balance transfer allows you to move your existing loan from one lender to another that offers a lower interest rate or better repayment terms. This can help reduce your monthly EMI and overall interest cost.
2. What is loan consolidation?
Loan consolidation is the process of combining multiple loans into a single loan. Instead of paying several EMIs every month, you make one single payment, which makes managing debt easier.
3. What is the difference between loan balance transfer and loan consolidation?
A loan balance transfer moves a single loan to another lender with better terms, while loan consolidation combines multiple loans into one loan to simplify repayment and potentially lower interest.
4. When should you consider a loan balance transfer?
You should consider a loan balance transfer when:
-
Another lender offers lower interest rates
-
Your credit score has improved
-
You want better repayment terms
-
You want to reduce your EMI
5. Does loan consolidation reduce monthly EMI?
Yes, loan consolidation can reduce monthly EMI by extending the loan tenure or offering a lower interest rate. However, a longer tenure may increase the total interest paid over time.
6. Can I transfer my personal loan to another bank?
Yes, many banks allow personal loan balance transfers. If another bank offers a lower interest rate, you can transfer the remaining balance and continue repayment with the new lender
7. Does a loan balance transfer affect your credit score?
A loan balance transfer may cause a temporary small dip due to a new credit inquiry, but making regular payments on the new loan can improve your credit score over time.
8. What are the benefits of loan consolidation?
Benefits include:
9. Are there any fees for loan balance transfers?
Yes, lenders may charge processing fees, foreclosure charges, or transfer fees. It’s important to compare the savings from lower interest with these costs.
10. Which option is better: loan balance transfer or loan consolidation?
The better option depends on your situation:
பேலன்ஸ் டிரான்ஸ்பர் முறையில் கடன் பெறுவது மற்றும் கடன் பெறத் தகுதி அதற்கான ஆவணங்கள், கால அளவு போன்றவற்றை பற்றியும் உங்களுடைய இன்றைய கடன் எலிஜிபிலிட்டி பற்றியும் எந்த வங்கியில் லோன் எடுத்தால் குறைந்த வட்டியில் உங்கள் வருமானத்திற்கு ஏற்ற லோன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இலவசமாக ஆலோசனை பெற அழைக்கவும் அந்தோணி ராஜ் - 9360283671 (பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் தமிழகம் முழுவதும்)