Personal loan for salary ₹15000 Private Employees - Is it possible?
| Call Antonyraj 9360283671 |
இன்றைய காலகட்டங்களில் ஒரு அவசர தேவையாக இருக்கட்டும் அல்லது ஏதேனும் ஒரு திட்டமிட்ட நிதி தேவைகளுக்கு எவரையும் சார்ந்து இருக்காமல் உடனடியாக இரண்டு அல்லது மூன்று நாட்களிலோ அல்லது உடனடியாகவோ கடன் பெறும் வசதி பர்சனல் லோன் வசதியாகும். பெரும்பாலும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC - Non Banking Finance company)இந்த பர்சனல் லோன் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வழங்கப்படுகிறது. பொதுவாக பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும் பர்சனல் லோன் ஆனது அந்த குறிப்பிட்ட வங்கியில் மாதாந்திர சம்பள அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பெர்சனல் லோன் தொகையானது, ஒரு நபர் மாத மாதம் அவரது வங்கிக் கணக்கில் பெரும் நிகர மாதச் சம்பளத்தின் (Net salary) அடிப்படையில் அதாவது அவருடைய மாத சம்பளத்தில் இ எஸ் ஐ, பிஎப் போன்ற இதர பிடித்தங்கள் போக நிகர தொகையாக வங்கி கணக்கில் பெரும் அமௌன்ட் யை பொறுத்து அவருக்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் கடன் தொகைக்கு திருப்ப செலுத்த வேண்டிய கால அளவுகள் ஒரு வருட முதல் ஏழு வருடங்கள் வரை வழங்கப்பட்டு வருகிறது பெரும்பாலும். வங்கிகளில் வழங்கப்படும் பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பர்சனல் லோனுக்கான வட்டி விகிதத்தை விட சற்று குறைவாக இருப்பதை காணலாம். இப்பொழுது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது ஒருவேளை நம்முடைய மாதச் சம்பள கணக்கு குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளில் இல்லை என்றால் நம்மால் பர்சனல் லோன் எடுக்க முடியாதா? ஏன் முடியாது? எடுக்க முடியும் அதாவது தனியார் வங்கிகளான எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ, ஆக்சிஸ், இண்டஸ் இன்ட், ஐடிஎப்சி போன்ற முன்னணி வங்கி நிறுவனங்கள் உங்களுடைய மாத சம்பளம் வேறு எந்த வங்கியில் இருந்தாலும் உங்களின் சம்பளத்தின் அடிப்படை மற்றும் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் செயல்முறை தரவரிசை அடிப்படையில் உங்களுக்கு தனிநபர் கடன் வழங்குகின்றன. வங்கி சார்ந்த கம்பெனி தரவரிசை (company catagory)என்பது ஒவ்வொரு வங்கிகளுக்கும் இடையே சிறிது வேறுபாடுகளுடன் இருக்கலாம். அவை முறையே Catagory SuperA, A, B, C, Staff, Salary Account, Government A, Government B, Others என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
| Call Antonyraj 9360283671 |
பொதுவாக வங்கிகளில் நாம் தனிநபர் கடன் பெற விரும்பினால் நம்முடைய மாதாந்திர நிகரச் சம்பளம் குறைந்த பட்சம் ₹30,000 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. இப்பொழுது புதிதாக பணியில் சேர்ந்த ஒரு நபருக்கு ₹30,000 மாத நிகர சம்பளம் என்பது அவ்வளவு எளிதல்ல. ஒருவேளை உங்களுடைய சம்பளம் 15 ஆயிரத்துக்கு மேல் 30 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் உங்களுக்கு பர்சனல் லோன் வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக ஆக்சிஸ் பைனான்ஸ், சோழமண்டலம் பைனான்ஸ், பிரமல் பைனான்ஸ், இன்க்ரிட், டாட்டா கேப்பிட்டல், கிரெடிட் சைசன், எஸ் எம் எஃப் ஜி போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் குறைந்த காலகட்டத்தில் உங்களுக்கான தனிநபர் கடன்கள் வழங்குகின்றன. ஆன்லைன் மூலம் உடனடியாக கடன் தர இன்று பல நிறுவனங்கள் உள்ளன. Google பிளே ஸ்டோரில் பல நிதி நிறுவன செயலிகள் பரவலாக காணப்படுகிறது ஆனால் அவற்றின் நம்பகத்தன்மை அவ்வளவு வெளிப்படையாக இல்லை. எனவே மேலே குறிப்பிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது நமக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
பாதுகாப்பானது என்பது வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் கால அளவு, முன்கூட்டிய செலுத்தும் கட்டண அளவு ( Foreclosure , Prepayment charges) போன்றவற்றில் எந்த விதமான மறைமுகத் தன்மையும் இல்லாமல் வெளிப்படையாக நமக்கு தெரியப்படுத்தி செயல்படுத்தும் நிறுவனங்களாகும் எனவே இது போன்ற நிறுவனங்களில் பர்சனல் லோன் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பர்சனல் லோன் பெறுவதற்கு குறைந்தபட்ச மாத நிகர சம்பளம் 15000 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டியது அவசியம் மேலும் பர்சனல் லோன் பெரும் நபரின் வயது 21 க்கு அதிகமாக இருக்க வேண்டும். மொத்த பணி அனுபவம் இரண்டு வருடங்களுக்கு அதிகமாக இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு அதிகமாகவும் மொத்த பணி அனுபவம் இரண்டு வருடங்களுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டியது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பணி புரியும் நபர் நிறுவனத்தின் நிரந்தர ஊழியராக இருக்க வேண்டியது அவசியம். அதாவது பணிபுரியும் நிறுவனத்தில் மாத மொத்த சம்பளத்தில் இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்யப்படும் நபராக இருக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. எனினும் ஒரு சில நிதி நிறுவனங்கள் இஎஸ்ஐ பிஎப் பிடித்தம் செய்ய படாவிட்டாலும் உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் மெயின்டைன் செய்யும் வங்கி பேலன்ஸை ( Average Bank Balance) பொறுத்து பர்சனல் லோன் வழங்குகின்றன.
பர்சனல் லோன் பெற தேவையான ஆவணங்கள்
போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு, பணிபுரியும் நிறுவனம் வழங்கிய ஊழியருக்கான அடையாள அட்டை, கடைசி மூன்று மாத சம்பள சான்று( Payslip/ Pay certificate), கடைசி ஆறு மாத வங்கி பரிவர்த்தனை அறிக்கை ( Bank statement/ Bank passbook xerox), தற்பொழுது ஏதேனும் கடன் பெற்றிருந்தால் அது பற்றிய விவரங்கள், வேறு மூன்றாம் நபர்களுக்கு அதாவது உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அவர்கள் எடுத்த லோனுக்கு கியாரண்டி/ஜாமீன் கையெழுத்துப் போட்டிருந்தால் அது பற்றிய விவரம் போன்றவை அடிப்படையாக தேவைப்படுகிறது. இவை தவிர்த்து சில நிதி நிறுவனங்களில் சொந்த வீட்டுக்கான சான்றிதழ் அவசியம் (வீட்டு வரி ரசீது நகல், மின்சார கட்டண ரசீது நகல் போன்றவை) சொந்த வீடு சான்றிதழ் என்பது பர்சனல் லோன் எடுக்கும் நபரின் பெயரிலோ, அல்லது அவருடைய பெற்றோரின் பெயரிலோ இருக்கலாம்.
மேலும் விவரமான விளக்கங்களுக்கு அழைக்கவும் Antonyraj 9360283671 ( பர்சனல் லோன் & கிரெடிட் கார்ட் சர்வீசஸ் தமிழகம் முழுவதும்)